வருமான வரி சோதனையில் தொடங்கிய விவகாரம்: 15 ஆண்டுகளுக்குப் பின் தந்தங்களை பிரகடனம் செய்த மோகன்லால்! | Actor Mohanlal has issued a public statement regarding the case concerning elephant tusks.

Spread the love

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், மோகன்லாலுக்கு வழங்கப்பட்ட உரிமச் சான்றிதழ்கள் சட்டப்படி செல்லாது என்று அதிரடி தீர்ப்பளித்தது. அதே சமயம், இந்த விவகாரத்தில் நடிகரை உடனடியாகத் தண்டிக்க உத்தரவிடாத நீதிமன்றம், இதுகுறித்து புதிய அறிவிப்பை வெளியிடுமாறு மாநில அரசுக்கு அறிவுறுத்தியது.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, வனத்துறையின் பொது மன்னிப்புத் திட்டத்தின் (Amnesty Scheme) கீழ் மோகன்லால் தற்பொழுது தன்னிடம் உள்ள பொருட்களைப் பிரகடனம் செய்துள்ளார்.

இத்திட்டத்தின்படி, சட்டவிரோதமாக வைத்துள்ள வனவிலங்குப் பொருட்களைத் தாமாக முன்வந்து தெரிவிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது.

மோகன்லால்

மோகன்லால்

இதில் ஆச்சரியமளிக்கும் விதமாக, 2011-ல் ஆரம்பத்தில் கூறப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக 6 தந்தங்கள் சேர்க்கப்பட்டு, மொத்தம் 10 யானைத் தந்தங்கள் மற்றும் 13 தந்த விக்கிரகங்கள் தன்னிடம் இருப்பதாக கொச்சி மலையாற்றூர் வனத்துறை அலுவலகத்தில் மோகன்லால் தெரிவித்துள்ளார்.

அவர் ஒப்படைத்துள்ள பொருட்களில் கிருஷ்ணர், ராமர் மற்றும் திருப்பதி பாலாஜி ஆகிய கடவுள்களின் தந்தத்திலான சிலைகளும் அடங்கும். இவற்றின் மொத்த எடை சுமார் 46 கிலோ கிராம் ஆகும். தன்னிடம் உள்ள பெரும்பாலான தந்தங்கள் பாரம்பர்யமாகத் தனக்குக் கிடைத்தவை அல்லது பரிசாகப் பெறப்பட்டவை என்று மோகன்லால் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்தத் தந்தங்கள் மற்றும் சிலைகளின் உண்மைத்தன்மையைக் கண்டறிய வனத்துறை அதிகாரிகள் டிஎன்ஏ பரிசோதனை செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *