
கும்பம் ராசி பலன்கள்:
சனிபகவான் உங்க ராசிக்கு இரண்டா மிடமான வாக்கு ஸ்தானத்துள வக்ரகதி அடையறார்ங்க இந்த அமைப்பு, வார்த்தகள்ல நிதானமும், உழைப்புல உறுதியும் இருந்தா, நன்மையுள் அதிகரிக்கும் என்பதைக் காட்டுதுங்க
பணியிடத்துல எந்த சமயத்திலும் துணிவைவிட பணிவுதான் நல்லதுங்க. பொறுப்புகள் கூடுதலாகும்போது, உணியைர் சுமையாக நினைச்சு முணுமுணுக்க ஆரம்பிச்சீங்கன்னா முன்னேற்றம் பாதிக்கப்படலாம்க பணிகளை தட்டிக் கழிக்கறதும் காலதாமதம் செய்யறதும் கூடாதுங்க. சக ஊழியர்கள்கிட்டே விணான வாக்குவாதம் செய்யறது, தர்மசங்கடத்துக்கு ஆளாக்கிடலாம்க அனுபவம் மிக்கவங்க ஆலோசனைகளைக் கேட்டா, அவங்க ஆதரவுல மேன்மைகள் கிட்டும்க
வீட்டுல விசேஷங்கள் வரத்தொடங்கும். குதர்க்கப் பேச்சாலும் குத்திக்காட்டலாலும் அதைக் குலைச்சுட வேண்டாம்க உங்க உடல்நலத்துல கவனம் செலுத்துங்க. வாழ்க்கைத் துணை வார்த்தைகளுக்கு மதிப்பு குடுங்க பணவரவு சீராக இருக்கும்க திட்டமிட்டு செலவிட்டா. சேமிப்பு நிலைக்கும்க இருக்கும்க. சுபகாரியங்கள்ள அவசரமோ அவட்சியமோ கூடாதுங்க. மகப்பேறுக்காக காத்திருக்கறவங்க உரிய மருத்துவ ஆலோசனைகளைக் கேட்கறது அவசியம்க.
செய்யும் தொழில்ல முயற்சிகள்ள முடங்காம இருந்தா வளர்ச்சி சீராக இருக்கும்க. கூட்டுத் தொழில்ல புதிய முதலீடுகள்ல அவசரம் கூடாதுங்க வங்கிக் கடன்களை உரிய காலகட்டத்துல திருப்பிச் செலுத்தறது அவசியம்க காசோலைகள், வங்கிக் கடன் அட்டைகளை பத்திரமா வைச்சுக்குங்க
அரசியல் துறையினர் வாக்குகள்ல கவனமா இருங்க கனவிலும் சட்டத்துக்கு விரோதமானவங்க நிழல் உங்கமேல படாதபடி கவனமா இருங்க. அவசியமில்லாம யாருக்கும் வாக்குறுதிகள் தராதீங்க. எதிர்பால் நட்புகளிடம் எல்லை வகுத்துப் பழகுங்க
மாணவர்கள் சுறுசுறுப்பா செயல்பட்டா மனம்போல உயர்வுகள் பெறலாம்க. அன்றன்றைய பாடங்களை அன்றன்றே படிக்கறதுல சோம்பல் கூடாதுங்க. கலை, படைப்புத் துறையினருக்கு திறமைகள் மதிக்கப்படக் கூடிய காலகட்டமாக இருக்கும்க. சஞ்சலத்துக்கும் சபலத்துக்கும் இடம்தராம இருந்தா, சீரான நன்மை கிடைக்கும்.
பெண்கள் மனசுல இருந்த குழப்பங்கள் நீங்கும்க. பழைய பகையை மனசுல வைச்சுக்கிட்டு யாரையும் வார்த்தைகளால வாட்ட வேண்டாம்க சுபகாரியங்கள்ல பெற்றோர் வார்த்தைகளைக் கேளுங்க வாரிக கள் வாழ்க்கைல வரும் உயர்வுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும்க. குடும்ப விஷயத்துல மூன்றாம் நபரை மத்தியஸ்தம் செய்யக் கூப்பிடாம இருந்தா மனையில மகிழ்ச்சி தங்கும்க
பயணங்கள்ள வேகத்தை அறவே தவிர்க்க ணும்க வாகனத்துல சிறு பழுது இருந்தாலும் உடனே சரி செய்யணும்க ஒற்றைத் தலைவலி சைனஸ், சுவாச உபாதைகள், நரம்பு எலும்பு உபாதைகள் வரலாம்க
சனிக்கிழமைகள்ல லக்க்ஷ்மி நரசிம்மரை ஆராதியுங்க. முடிஞ்சா ஒருமுறை குடந்தை சக்ரபாணி கோயிலுக்குச் சென்று வணங்கிட்டு வாங்க, வாழ்க்கை சர்க்கரையா இனிக்கும்.