வாகனத்தில் ஏற்படுத்தும் ஒவ்வொரு உருமாற்றத்திற்கும் தனித்தனியாக அபராதம் கேரள ஐகோர்ட் சொல்வது என்ன? | ‘Separate fine for every modification made to a vehicle’ – What does the Kerala High Court say?

Spread the love

கேரள மாநிலத்தில் ​மீட்புப் பணிக்காகச் சென்ற ஜீப் ஒன்றில் பல இடங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. அந்த வாகன ஓட்டுநருக்கு ரூ.5,000 அபராதம் வசூலிக்கப்பட்டிருந்தது.

அதற்கு கேரள உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்தது. விதியை மீறி பொருத்தப்படும் அதிக பிரகாசமுள்ள விளக்குகளுக்கும் கட்டாயம் தனித்தனியாக அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

வாகனங்களில் விதிகளுக்குப் புறம்பாகச் செய்யப்படும் ஒவ்வொரு உருமாற்றத்திற்கும் தனித்தனியாக தலா ரூ.5,000 வீதம் அபராதம் விதிக்க வேண்டும். வாகனங்களின் வெளிப்புறத்திலோ, ஓட்டுநர் கேபினிலோ அல்லது பயணிகள் அமரும் பகுதியிலோ எவ்வித சட்டவிரோத விளக்குகளோ, அலங்காரங்களோ இடம்பெறக் கூடாது என்றும் நீதிபதிகள் அனில் கே. நரேந்திரன், எஸ். முரளி கிருஷ்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மோட்டார் வாகனத் துறையின் அமலாக்கப் பிரிவுக்கும், காவல்துறையினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரள உயர் நீதிமன்றம்

கேரள உயர் நீதிமன்றம்

சாலைப் பாதுகாப்பு, ஒலி மற்றும் காற்று மாசு கட்டுப்பாட்டு விதிகள் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுகளையும் மத்திய மோட்டார் வாகன விதிகளையும் மீறுவது பாதசாரிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *