வாக்குப்பதிவு நாளிலும் தாராபுரத்தில் அராஜகம்.. கார் நிறைய டோக்கன்.. தவெக காரை சிறைபிடித்த அதிமுக | ADMK persons catched TVK car in Dharapuram token founded

Spread the love

Tamilnadu

oi-Pavithra Mani

தாராபுரம்: மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. தாராபுரத்தில் வாக்குப்பதிவு நாளிலும் தவெக பணம், டோக்கன், பரிசு பொருட்கள் கொடுப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறுகின்றன. விதிகளை மீறி கோவை தவெக நிர்வாகிகள் தொகுதிக்குள் டோக்கன் கொடுக்கிறார்கள். அவர்கள் வந்த காரை சிறை பிடித்து அதிமுகவினர் வாக்குவாததத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

தாராபுரம் தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் 13 பேர் சுயேச்சைகள். தவெக சார்பில் சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, சிபிஐ சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் சார்பில் கார்த்திகா போட்டியிடுகிறார்கள். தவெக, அதிமுக, திமுக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. தாராபுரத்தில் மொத்தம் 2 லட்சத்து 22 ஆயிரத்து 406 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 875 பேர் ஆண் வாக்காளர்கள் ஆவர். 1 லட்சத்து 15 ஆயிரத்து 523 பேர் பெண் வாக்காளர்கள் ஆவர். 8 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

Dharapuram TVK

தவெக கார் சிறைபிடிப்பு

தாராபுரம் தொகுதி கொங்கு மண்டலத்தில் இருந்தாலும் அது திமுக வலுவாக உள்ள தொகுதி. தாராபுரம் வெற்றியை அதிமுக கௌரவ பிரச்சனையாக பார்க்கிறது. ஆட்சியை தக்க வைக்க தாராபுரத்தில் தவெக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மூன்று கட்சிகளும் வெற்றிக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்தனர். வாக்குப்பதிவு நாளிலும் தாராபுரம் தொகுதியில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. அரசியல் களம் இப்போதும் அனல் பறக்கிறது.

தாராபுரம் தொகுதிக்குட்பட்ட வீராச்சிமங்கலத்தில் கோவை பதிவு எண் கொண்ட காரில் தவெக நிர்வாகிகள் சென்ற காரை அதிமுகவினர் சிறை பிடித்தனர். அப்போது அதிமுகவினர், “கோவைக்காரர்களுக்கு இப்போது அங்கு என்ன வேலை. பிரச்சாரம் முடிந்தவுடனே வெளியூர்காரர்கள் அவரவர் ஊருக்கு சென்றிருக்க வேண்டும். அப்படி செல்லாமல் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்” என கேட்டனர்.

மாறி மாறி வாக்குவாதம்

மேலும் அவர்களின் காரில் இருந்து வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த டோக்கனை எடுத்து குற்றம் சாட்டினர். இதற்கு தவெகவினர், “அதிமுக அராஜகம் செய்கிறது. எதிர்க்கட்சிகள் அராஜகம் செய்கிறது. நாங்கள் வம்பு செய்ய வரவில்லை. சிவனே என்று நின்றிருப்பவர்களை பிடித்து அராஜகம் செய்வதாக கூறுகிறார்கள். நாங்கள் சாப்பிடுவதற்காக ஓரமாக நின்று கொண்டிருந்தோம். அநாவசியமாக மரியாதை இல்லமாக பேசுகிறார்கள். டோக்கன் கொடுத்ததாக பொய் பேசி அடிக்க வருகிறார்கள்.

நாங்கள் கோவை தான். இப்பகுதிக்கான பொறுப்பாளர்கள். இந்த பூத் கமிட்டி பிரச்சனையானது. அதிமுகவினர் பிரச்சனை செய்ய திட்டமிடுகிறார்கள். எங்கள் பூத்தில் ஒருவர் கூட இல்லை. எமர்ஜென்சிக்காக இங்கு நின்று கொண்டிருக்கிறோம். வாக்குச்சாவடி மையத்தில் இருந்து தள்ளி தான் நிற்கிறோம். நாங்கள் எந்த தப்பும் செய்யவில்லை. எங்கள் வண்டியில் எதுவும் இல்லை என்பதால் பிரச்சனை செய்கிறார்கள்” என்றனர்.

அதிகாரிகளிடம் புகார்

அதிமுகவினர் கூறுகையில், “நாங்கள் ஓட்டு போடுவதற்காக வந்தோம். நேற்றில் இருந்து இந்த வண்டி இங்கேயே சுற்றி கொண்டிருக்கிறது. நீங்கள் யார் ஓட்டு போட வந்துள்ளீர்களா என கேட்டோம். அதற்கு தவெக மேற்கு ஒன்றியம். வெளியூர்காரர்கள் பிரச்சாரத்திற்கு பிறகு இருக்க கூடாது. அதை கேட்டால் ஆளுங்கட்சியினர் அப்படித்தான் இருப்போம் என சொல்லி எங்களை அடிக்க வருகிறார்கள். அவர்கள் வண்டியை சோதனை செய்ய விடுவதில்லை. அதிகாரிகளிடம் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை” என கூறினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *