Cricket
oi-Yogeshwaran Moorthi
லக்னோ: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டி20 போட்டி இன்று மாலை லக்னோ மைதானத்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டி எத்தனை மணிக்கு தொடங்கும், தொலைக்காட்சியில் எந்த சேனலில் நேரடி ஒளிபரப்பாகிறது, ஓடிடியில் எந்த செயலியில் நேரலையை காணலாம் என்பது தொடர்பாக அத்தனை விவரங்களையும் பார்க்கலாம்.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. ஏற்கனவே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதில் விராட் கோலி, ரோகித் சர்மா, சுப்மன் கில், ருதுராஜ், கேஎல் ராகுல் உள்ளிட்டவர்கள் சிறப்பாக விளையாடினர். ஆனால் பவுலர்களின் ஆட்டம் விமர்சனத்தை பெற்றது.

இந்த நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று லக்னோ மைதானத்தில் தொடங்க உள்ளது. ஏசியன் கேம்ஸ் தொடரில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தி இருக்கும் சூழலில், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி உடனடியாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் களமிறங்க உள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த டி20 அணியில் பும்ரா, வருண் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் இடம்பெறவில்லை. அர்ஷ்தீப் சிங்கை தவிர்த்து மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ் உள்ளிட்டோரே வேகப்பந்துவீச்சாளர்களாக செயல்பட உள்ளனர். அதேபோல் வைபவ் சூர்யவன்ஷிக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. போட்டி லக்னோ மைதானத்தில் நடப்பதால், மயங்க் யாதவ் களமிறங்க கூடும்.
இந்த டி20 கிரிக்கெட் போட்டி இன்று மாலை 6.30 மணிக்கு டாஸ் போடப்பட உள்ளது. மாலை 7 மணிக்கு முதல் பந்து வீசப்படும். நீண்ட இடைவெளிக்கு பின் லக்னோவில் கிரிக்கெட் போட்டி நடப்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் ரசிகர்கள் பார்க்க முடியும்.
அதேபோல் ஓடிடியை பொறுத்தவரை ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் நேரலையில் காண முடியும். வலிமையான வெஸ்ட் இண்டீஸ் அணியை அனுபவம் குறைந்த இந்திய அணி எதிர்த்து விளையாட இருக்கிறது. இதனால் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர் பார்வையாளர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.