‘வாயை விட்ட மூசா;கடுப்பில் முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள்?- லண்டன் ரசிகர் சந்திப்பு ரத்து பின்னணி |’Moosa’s call for fans meet; CM Vijay’s Security Officers got irritated? – London fans meet cancellation

Spread the love

லண்டன் காவல்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும். வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் பேச வேண்டும். இந்த பிராசஸ் எல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதே மூசா ரசிகர்களிடம் வாக்குறுதி கொடுத்துவிட்டார் என்கிறார்கள். அந்தத் தகவல் லண்டன் வாழ் தமிழர்களின் சமூக வலைதள பக்கங்களில் தீயாய் பரவ நேற்று முதல்வர் தங்கியிருந்த ஹோட்டல் முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிவிட்டனர்.

பெர்மிசன் எதுவும் இல்லாமல் லோக்கல் போலீஸின் சப்போர்ட் இல்லாமல் இவர்களை எப்படி முதல்வரிடம் நெருங்க செய்ய முடியும்? `தி ஷார்ட்’ பகுதி அதி சொகுசான இடம். அங்கே இருக்கும் மற்ற விவிஐபிக்களின் பாதுகாப்பையும் லோக்கல் போலீஸ் கருத்தில் கொண்டு அனுமதி வழங்கவில்லை.

இந்த குழப்பத்தை சரி செய்து கூடியிருந்த கூட்டத்தை கலைப்பதற்குள் முதல்வரின் Core Cell டிஐஜி தர்மராஜ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் திக்குமுக்காடிவிட்டனர்’ என்கின்றனர்.

மூசா - தர்மராஜ்

மூசா – தர்மராஜ்

‘ரசிகர் சந்திப்பு தகவலை மூசா முன்கூட்டியே சொல்லாமல் இருந்திருந்தால் இந்த பிரச்னையே வந்திருக்காது என முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள் மூசா மீது அதிருப்தியில் இருக்கின்றனராம். ஆனாலும் முதல்வருக்கு நெருக்கமானவர் என்பதால் பல்லைக் கடித்துக் கொண்டு விஷயத்தை பெரிதுபடுத்தாமல் இருக்கின்றனர்’ என அதிகாரிகள் வட்டத்தில் கிசுகிசுக்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *