மேஷம்:
பெருமை, புகழுடன் பொறுப்புகளும் அதிகரிக்கக்கூடிய காலகட்டம்க. உங்க திறமையை வெளிப்படுத்தும் சந்தர்ப்பமும் அமையும்க பலகாலக் கனவுகள் நனவாகும் வாய்ப்பு வரும்க. சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் உண்டுங்க. யாருடைய முகஸ்துதிக்கும் மயங்காம இருந்தா, முன்னேற்றம் தொடரும்க. இல்லத்துல மகிழ்ச்சி நிறையும்க. வீடு, மனை, வாகனம் சேரும்க வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் ஏற்படும்க. செய்யும் தொழில்ல வளர்ச்சி ஏற்படத்தொடங்கும்க. வெளிநாட்டு வாணிபம் ஆதாயம் தரும்க. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு திடீர் பதவி, பாராட்டு கிட்டும்க. ஜாமீன் கையெழுத்துப் போடும்போது கவனமா இருங்க. இரவுப் பயணத்தை இயன்றவரை தவிருங்க. தூக்கமின்மை, நரம்பு உபாதைகள் வரலாம்க. இஷ்ட அம்மனைக் கும்பிடுங்க. எண்ணங்கள் ஈடேறும் அலர்ஜி, அடிவயிறு, சுவாச உபாதைகளை உடனே கவனியுங்க. கந்தசுவாமியைக் கும்பிடுங்க. வாழ்க்கைல களிப்பு நிறையும்.
ரிஷபம்:
முன்னேற்றத்துக்கான வெளிச்சம் தெரியக்கூடிய காலகட்டம்க. பணியிடத்துல உங்க திறமைக்கு உரிய பெருமைகள் வந்து சேரும்க. பொறுப்பு உணர்ந்தும் திட்டமிட்டும் செயல்பட்டா, தொடர்ச்சியா ஏற்றமும் ஏற்படும்க. குடும்பத்துல நிம்மதி இடம்பிடிக்கும்க. விட்டுக் கொடுப்பதில் அடம்பிடிக்காம இருந்தா நல்லவை நடக்கும்க. குழந்தைகளால் பெருமை சேரும்க. சுபகாரியங்கள்ல பெரியோர் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்க வீடு, மனை யோகம் வரும்போது பத்திரங்களை கவனமா படியுங்க. செய்யும் தொழில்ல முழுமையான உழைப்பு முக்கியம்க. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு வாக்குல நிதானம் அவசியம்க தொலைதூரப் பயணத்துல வேகம் வேண்டாம்க. அடிவயிறு, தலைவலி, வரலாம்க. தும்பிக்கையானைத் துதியுங்க. வாழ்க்கை மணக்கும்.
மிதுனம்:
கவனம் திசைதிரும்பாம செயல்படவேண்டிய காலகட்டம்க. அலுலலகப் பொறுப்புகள்ல நிதானமும் நேரடி கவனமும் முக்கியம்க. பிறர் செய்யும் தவறுகளைப் பெரிதுபடுத்திப் பேசுவது கூடாதுங்க. வீட்டுல விசேஷங்கள் வரத்தொடங்கும்க. குடும்ப விஷயங்களைப் பொது இடங்களில் பேசவேண்டாம்க. வாழ்க்கைத் துணை ஆலோசனைகளை அவசியம் கேளுங்க. செய்யும் தொழில்ல சோம்பல் கூடாதுங்க. கூட்டுத் தொழில்ல புதியமுதலீடு தவிருங்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க பொது இடங்கள்ல வாக்கு தரும் முன் யோசியுங்க. வாகனப் பழுதுகளை உடனுக்குடன் சீர் செய்யுங்க. ரத்த அழுத்த மாற்றம், முதுகுவலி பிரச்னைகள் வரலாம்க. சிவனை வணங்குங்க. வாழ்க்கை சீராகும். சிறக்கும்.
கடகம்:
தன்னம்பிக்கை அதிகரிச்சு, மேன்மைகள் வரக்கூடிய காலகட்டம்க. அலுவலகத்துல உங்க திறமை உணரப்படும்க. எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்க. பணவரவு சீராகும்க. குடும்பத்துல குதூகலம் இடம்பிடிக்கும்க. குழந்தைகள் வாழ்க்கைல தடைகள் நீங்கும்க. தம்பதிகளிடம் அன்யோன்யம் ஏற்படும்க. புது உறவுகளும் அதனால் வரவும் ஏற்படும்க. வழக்குகள் ஜெயமாகும்க. செய்யும் தொழில்ல செழிப்பு உருவாகும்க. பங்குவர்த்தக முதலீட்டுல கவனமா இருங்க. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு சாதகமான குழல் உருவாகும்க. புறம்பேசுவோரிடம் கவனமா இருங்க. வாகனத்துல செல்லும்போது கவனச்சிதறல் வேண்டாம்க. அஜீரணம், மூட்டுவலி வரலாம்க. துர்க்கையைக் கும்பிடுங்க. வாழ்க்கை துளிர்க்கும்.
சிம்மம்:
நிதானமாகச் செயல்படவேண்டிய காலகட்டம்க. பணியிடத்துல பொறுப்பு உணர்வும்; நேரம் தவறாமையும் முக்கியம்க. கோப்புகள்ல கையெழுத்திடும் சமயங்களில் கவனமா இருங்க. குடும்பத்துல குத்தலும் குதர்க்கமும் கூடாதுங்க. உறவுகள் யாரையும் உதாசீனப்படுத்தறதும் தவறுங்க. சகோதர உறவுகளால பெருமை சேரும்க, விலை உயர்ந்த பொருட்களை பத்திரமா பார்த்துக்குங்க. கொடுக்கல் வாங்கலை உடனுக்குடன் குறிச்சு வையுங்க. வழக்குகள்ல நிதானத்தைக் கடைபிடிங்க. செய்யும் தொழில்ல முயற்சிகள்ல முடங்கக் கூடாதுங்க. அரசியல், அரசு சார்ந்தவங்க கனவிலும் தலைமைக்கு எதிராகப் பேசவேண்டாம்க. வாகனத்துல சிறிய பழுதையும் உடனே சரி செய்யுங்க. பரம்பரை உபாதைகள் வரலாம்க. மாருதியைக் கும்பிடுங்க. மகிழ்ச்சி மலரும்.
கன்னி:
கனவுகள் நனவாகக் கூடிய காலகட்டம். இந்த சமயத்துல வாக்குல இனிமை 1 சேர்த்துக்கறது நல்லதுங்க. அலுவலகத்துல உங்க திறமை உணரப்படும்க. பிறர் செய்யும் தவறுகளை பெரிதுபடுத்திப் பேசறதைவிட, அன்பாக சுட்டிக்காட்டித் திருத்தறதுதான் நல்லதுங்க. இடமாற்றம், பணி மாற்றம் வந்தால் மறுக்காம ஏற்றுக்குங்க. இல்லத்துல நிம்மதி நிலவும்க வாரிசுகளால் பெருமை சேரும்க. சுபகாரியங்கள்ல ஆடம்பரம் தவிருங்க. அக்கம் பக்கத்தினரிடம் எல்லை வகுத்துப் பழகுங்க. செய்யும் தொழில்ல சீரான வளர்ச்சி ஏற்படும்க. அரசியல், அரசு சார்ந்தவங்க சட்டப்புறம்பு நட்பை சட்டுன்னு விலக்கிடுங்க. தொலைதூரப் பயணத்தை பகலிலேயே தொடங்குங்க. ஒற்றைத் தலைவலி, மன அழுத்தம் வரலாம்க. புற்றுள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று கும்பிடுங்க. புதுமலர்ச்சி பிறக்கும்.
துலாம்:
நல்லவை நடக்கக்கூடிய காலகட்டம்க. அதேசமயம் செயல்கள்ல அமைதியும் நேரடி கவனமும் நேரம் தவறாமையும் முக்கியம்சு. உயரதிகாரிகள் ஆதரவு மகிழ்ச்சி தரும்க. உடனிருப்போரிடம் வீண் தர்க்கம் வேண்டாம்க. இல்லத்துல இனிமை நிலவும்க. வாழ்க்கைத் துணை உடல் நலத்துல கவனம் செலுத்தணும்க. பணவரவு சீராக இருக்கும்க. சுபகாரியங்களுக்காக கடன்பட நேரிடலாம்க. ஆனா, அதுல ஆடம்பரம் தவிர்த்தா சீக்கிரமே அடைபடும்க. வீடு, வாகனம் புதுப்பிக்க நேரம் வரும்க ஆடை, ஆபரணம் சேரும்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க அடக்கமாகச் செயல்படறது அவசியம்க. செய்யும் தொழில்ல சீரான வளர்ச்சி ஏற்படும்க. நேர்வழியும் நேர்மையும்தான் நல்லதுங்க. வாகனப் பழுதை உடனுக்குடன் சீர் செய்யறது முக்கியம்க காது, மூக்கு, தொண்டை, உணவுக்குழாய் உபாதைகளை உடனே கவனியுங்க. பைரவரைக் கும்பிடுங்க. வாழ்க்கை பசுமையாகும்.
விருச்சிகம்:
முயற்சிகள் முழுமையாகப் பலன் தரும் காலகட்டம்க. பணியிடத்துல உங்க திறமைக்கு உணரப்பட்டு, பாராட்டு கிடைக்கும்க. உழைப்புக்கு ஏற்ற பெருமை வந்துசேரும்க. இந்த சமயத்துல தற்பெருமை உயர்ந்துடாம பார்த்துக்கிட்டா, தலை நிமிர்ந்து நடக்கலாம்க. மனையில மகிழ்ச்சி தங்கும்க. அது நிலைச்சு இருக்கணும்னா நீங்க வீண் கோபம் தவிர்க்கணும்க. மனம்போல மணமாலையும் மகப்பேறும் கிட்டும் அறிகுறிகள் தெரியும்க. கருத்தாங்கும் பெண்கள் கவனமா இருங்க, செய்யும் தொழில்ல லாபம் பெருகும்க. புதிய முதலீடுகள்ல நிதானம் முக்கியம்க. அரசு, அரசியல் துறையினருக்கு திடீர் பதவி, பொறுப்புகிட்ட வாய்ப்பு உண்டுங்க. வாகனத்துல செல்லும்போது லாகிரிக்கு இடம்தராம இருக்கறது அவசியம்க. பாதம், அடிவயிறு உபாதைகள் வரலாம்க. இஷ்ட மகானைக் கும்பிடுங்க. எண்ணங்கள் ஈடேறும்.
தனுசு:
மனகல இருந்த இனம்புரியாத பயம் விலகும்க. பணியிடத்துல உங்க திறமை உரியவர்களால் உணரப்படும்க. யாரோ செய்த தவறுக்கு வீண் பழி சுமந்த நிலைமை மாறும்க. குடும்பத்துல நிம்மதி நிறையும்க. குழந்தைகளால் பெருமை சேரும்க. வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் உருவாகும்க. விலகி இருந்த உறவுகள் மீண்டும் வந்து சேரும்க, வீடு, வாகனம் வாங்க புதுப்பிக்க யோகம் உண்டுங்க. மூன்றாம் நபரிடம் குடும்ப விஷயம் பேசவேண்டாம்க. செய்யும் தொழில்ல வளர்ச்சி தொடர்ச்சியாக இருக்கும்க. அரசு, அரசியல் துறையினருக்கு மேலிடத்தின் ஆதரவு கிட்டும்க. தேவையற்ற தர்க்கத்தை மட்டும் விரட்டணும்க. வாகனப் பாதையில இருட்டுல இறங்க வேண்டாம்க. அடிவயிறு, ஒற்றைத் தலைவலி உபாதைகள் வரலாம்க. மகாலக்ஷ்மியை வணங்குங்க. வாழ்க்கை மணக்கும்.
மகரம்:
எண்ணம்போல ஏற்றங்கள் வரக்கூடிய காலகட்டம்க. பணியிடத்துல உங்க பலகால முயற்சிகளின் பலனாக, ஏற்றமும் மற்றமும் தேடி வரும்க. புறம்பேசும் நபர்களை உடனடியா புறம் தள்ளுங்க. குடும்பத்துல சந்தோஷ வெளிச்சம் பரவும்க. குழந்தைகளைக் கண்டிக்கும்போது தேவையற்ற அதிகாரம் வேண்டாம்க. ஆடை, ஆபரணம் சேரும்க. சுபகாரியங்கள்ல அதிக ஆடம்பரம் வேண்டாம்க. வரவை சேமிக்கப் பழகுங்க. செய்யும் தொழில்ல நிதானம் முக்கியம்க. புதிய முதலீடுகளை யோசித்து செய்யுங்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க கையொப்பம் இடும்போது கவனமா இருங்க. முகஸ்துதியை விலக்குங்க. இரவுப் பயணத்தை இயன்றவரை தவிருங்க. காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம்க. ஏழுமலையானைக் கும்பிடுங்க, வாழ்க்கை ஏற்றம்பெறும்.
கும்பம்:
உங்க உழைப்புக்கு ஏற்ப உயர்வுகள் வரக்கூடிய காலகட்டம்க. அலுவலகத்துல பொறுப்புகள் அதிகரிக்கலாம்க. அதை சுமையாக நினைக்காம திட்டமிட்டு செய்தா, திறமை பேசப்படும்க. யாரோட தனிப்பட்ட விஷயத்துலயும் நீங்க மூக்கை நுழைக்க வேண்டாம்க. வீட்டுல நிம்மதி இடம்பிடிக்கும்க. வீடு, மனை வாங்க விற்க யோகம் உண்டுங்க. உறவுகளோட ஏற்பட்டிருந்த விரிசல் மறையும்க. பணவரவை முடிஞ்ச அளவு சேமிக்கப் பழகுங்க. செய்யும் தொழில்ல நேரான உழைப்பு இருந்தா, சீரான வளர்ச்சி ஏற்படும்க. கூட்டுத் தொழில்ல கவனமா இருங்க. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு ஆதரவு நிலைக்கும்க. எதிர்பாலருடன் எல்லை வகுத்துப் பழகுங்க. வாகனத்துல வீண் வித்தைகாட்டல் வேண்டாம்க. தலைவலி, வயிறு உபாதைகள் வரலாம்க. துர்க்கையைக் கும்பிடுங்க. வாழ்க்கை துளிர்க்கும்.
மீனம்:
அவசரமும் அலட்சியமும் கூடாத காலகட்டம்க. அலுவலகத்துல திட்டமிடலும் நேரம் தவறாமையும் ரொம்பவே அவசியம்க. அனுபவம் மிக்கவங்க ஆலோசனைகளை அவசியம் கேளுங்க. வீட்டுல விடியல் வெளிச்சம் பரவத் தொடங்கும்க. வேண்டாத கோடம் அதை விரட்டிடலாம், சினம் தவிர்ப்பதே சிறப்புங்க. குடும்பத்துப் பெரியவங்க உடல்நலத்துல கவனம் செலுத்துங்க. பூர்வீக சொத்து ஆதாயம் தரும்க. தரல், பெறல் எதையும் உடனுக்குடன் குறிச்சு வையுங்க. செய்யும் தொழில்ல முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் இருக்கும்க.
பங்கு வர்த்தக முதலீடுகளைத் தவிருங்க, அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு நிதானம் முக்கியம்க. கையெழுத்துப் போடும் சமயத்துல கவனமா இருங்க. யோசியுங்க. வாகனப் பயணத்துல கவனச் சிதறல் கூடாதுங்க, அலர்ஜி, அல்சர் உபாதைகள் வரலாம்க. பைரவரைக் கும்பிடுங்க. வாழ்க்கை பசுமையாகும்.


