ஒரே நாளில் 3 முறை பார்த்த ‘கில்லி’ மேஜிக்… இன்றும் பத்திரமாக இருக்கும் சிடி கேசட்! | How Thalapathy Vijay’s Movies Became an Integral Part of a Family’s Beautiful Journey

Spread the love

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

 இளைய தளபதி அவர்கள் நடித்துள்ள எண்ணற்ற திரைப்படங்களை கண்டு களித்துள்ளேன், ரசித்துள்ளேன், (ரசிகன்,பிரண்ட்ஸ், துப்பாக்கி,திருப்பாச்சி, ஆதி, கில்லி,குருவி, பூவே உனக்காக போன்ற எண்ணற்ற திரைப்படங்கள் இதில் அடங்கும்.

 இதில் என் மனதை மிகவும் கவர்ந்த திரைப்படம் என்றால் அது கில்லி திரைப்படம். இத்திரைப்படத்தில் இளைய தளபதி விஜய் அவர்களும், நடிகை திரிஷா அவர்களும் இணைந்து நடித்திருப்பார்கள். இத்திரைப்படத்தில் இளைய தளபதி விஜய் அவர்களின் கதாபாத்திர பெயர் *வேலு* திரிஷா அவர்களின் கதாபாத்திர பெயர் தனலெட்சுமி.

விஜய் அவர்கள் ஒரு கபடி வீரர் ஆவார். தளபதி அவர்கள், முத்துப்பாண்டியிடமிருந்து, தனலெட்சுமியை காப்பாற்றி, தன் சொந்த வீட்டில் யாருக்கும் தெரியாமல் மறைத்து  வைத்து, பாதுகாத்து, அமெரிக்கா செல்ல உதவி செய்வார் பாருங்க, மதுரையில் இருந்து, சென்னை வரை தனலெட்சுமியை காப்பாற்ற அவர் பட்ட கஸ்டங்களை வார்த்தையால் சொல்ல இயலாது, அப்பப்பா, எவ்வளவு கஸ்டங்கள், இன்றும் இந்த முழு திரைப்படம் என் கண் முன்னே நிற்கின்ற என் மனதை மிகவும் கவர்ந்த திரைப்படம் ஆகும்.

கூடுதல் தகவலாக ஒன்றை நான் பதிவிட்டே ஆக வேண்டும். கில்லி திரைப்பட CD Cassette  வாங்கி வந்து வீட்டில் நான் பிள்ளைகள் அனைவரும் குடும்பமாக பார்த்து ரசித்து மகிழ்ந்த நாட்கள் ஏராளம். அதிலும் விடுமுறை தினமானால் ஒரே நாளில் மூன்று முறையெல்லாம் திரும்ப, திரும்ப பார்த்து மகிழ்ந்துள்ளோம். இது 100% உண்மை. நாங்கள் பார்த்து மகிழ்ந்த CD Cassette. -ஐ ஆவணப்படுத்தி புகைப்படமாக இந்த கட்டுரையுடன் இணைத்துள்ளேன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *