விசிகவால் வந்த வினை…. வன்னியர்ஸை கவருமா தவெக? லீக்கான ஆபரேஷன்..! – Kumudam

Spread the love

தவெக… சட்டமன்றத் தேர்தலில் சாதி, மதம் என அனைத்தையும் உடைத்து, எளிய வேட்பாளர்களும் மக்கள் பிரதிநிதிகளாக தேர்வாக வழிவகுத்தது. விஜய்க்கான மவுஸே இதற்கு காரணம் என்று கூறப்படும் நிலையில், தமிழகத்தின் சில மாவட்டங்களில் டோட்டல் ஜீரோவாக மாறியது என்பதே நிதர்சனம். 

குறிப்பாக, வட மாவட்டங்களான அரியலூர், விழுப்புரம், மயிலாடுதுறை போன்ற வன்னியர் சமுதாய மக்கள் அதிகம் வாழும் மாவட்டங்களில் தவெகவால் சோபிக்க முடியவில்லை. கடலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு இடத்தை மட்டுமே தவெக பிடித்திருந்ததால், வன்னியர்ஸ் மத்தியில் தன்னுடைய நட்சத்திர மவுஸ் ஏன் வொர்க் அவுட் ஆகவில்லை என்று தவெக தலைமை அப்செட்டானதாகக் கூறப்படுகிறது. ஆனால், வன்னியர் பெல்ட்டை அதிமுக – பாமக கூட்டணி அப்படியே லாவகமாக தட்டித்தூக்கியது தவெகவை ஆட்டம் காணவைத்தது. கிட்டத்தட்ட 32 இடங்களையும் கைப்பற்றி, வன்னியர்கள் தங்களுக்கானவர்கள், இது எங்களுடைய கோட்டை என்று நிரூபித்தன அதிமுக மற்றும் பாமக.

ஆட்சி அமைக்கவே சிக்கலாக இருந்ததால், இதுகுறித்து பெரிதும் யோசிக்காத தவெக தலைமை, ஆட்சி அமைந்து ஒரு மாதக் காலம் நிறைவடைய உள்ள நிலையில், தங்களுக்கு வெற்றிக் கிடைக்காத இடங்களை டார்கெட் செய்யத் தயாராக இருப்பதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில், வன்னியர்களை கவர தவெக தலைமை களமிறங்கியுள்ளதாகவும், அதற்காக ஆபரேஷன் ஒன்றை செய்ய உள்ளதாகவும் உள்விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதாவது, வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு கட்சியில் மிக முக்கியப் பொறுப்புகள், அதிகாரங்களை தவெக தலைமை வழங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, முன்னாள் உள்ளாட்சி நிர்வாகிகள், சமூக அமைப்புகளின் பொறுப்பாளர்கள் மற்றும் பிற கட்சிகளில் செல்வாக்கு கொண்ட நிர்வாகிகளை கட்சிக்குள் கொண்டு வருவதே இந்த ஆபரேஷனின் மிக முக்கிய நோக்கமாக இருப்பதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், வன்னியர் சமூகத்தின் ஆதரவு தளமாக இருக்கும் பாமகவை கூட்டணிக்குள் இழுக்கவும் தவெக தலைமை நினைக்கிறதாம். ஆனால், இது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தெரியவில்லை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

பாமகவை கூட்டணிக்குள் இழுத்தாலும் வன்னியர்கள் தவெகவிற்கு ஆதரவளிப்பது கடினம் என்றே தெரிகிறது. காரணம், திருமாவளவன். விசிக ஆட்சியில் பங்கு வகிப்பதால், வன்னியர்கள் வாக்கை தவெக பெருவதில் சிரமம் தான் என்றும், மறுபக்கம் பாமக கூட்டணிக்குள் வந்தால் விசிக கூட்டணியைவிட்டு விலகும், இதனால் பாதிப்பு தன்னுடைய ஆட்சிக்கே என்பதை நன்குணர்ந்துள்ள தவெக தலைமை, பாமகவை சீண்டாமல் அதன் கூடாரத்தை மட்டும் தன் பக்கம் இழுக்க ஸ்கெட்ச் போட்டு வருகிறதாம்.

எது எப்படியோ, தவெகவின் இந்த ஆபரேஷன் கொஞ்சம் மிஸ்ஸானாலும் ஆபத்து விஜய் ஆட்சிக்குத்தான் என்கின்றனர் உள்விவரம் அறிந்தவர்கள்.

 

 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *