விசிகவினர் சில தொகுதிகளில் தேர்தல் பணி செய்யவில்லை: வீடியோ வெளியிட்டு திருமாவளவன் வேதனை  – Kumudam

Spread the love

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்றில், அவர் கூறியிருப்பதாவது:- தேர்தல் பணியாற்றியதில் ஒரு சில தொகுதிகளில் இருந்து தோழர்கள் ஒற்றுமையாக இருந்து பணியாற்றவில்லை என்ற தகவல்கள் தெரியவந்துள்ளன. அது குறித்து தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. களப்பணி ஆற்றிய அத்தனை தோழர்களுக்கும் என் பாரட்டுக்களையும், நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன். 5 ஆண்டுக்கு ஒருமுறை சட்டசபை தேர்தல் நடக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் பலர் பொதுத் தொகுதிகளில் தங்களுக்கு இந்த முறை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பது உண்டு. 

அப்படி இந்த வாய்ப்பு வழங்கப்படாமல் ஏமாற்றம் அடைவது ஒரு தொடர்கதையாக இருக்கும். ஆகவே பொதுத் தொகுதிகளில் வேட்பாளர்களை மாற்றுவது தவிர்க்க முடியாததாகிறது. பொதுத் தொகுதிகளில் மட்டுமல்ல, மொத்தமாக, ஏனென்றால் நாம் குறைவான தொகுதிகளை பெறுகின்றபோது.புதிய புதிய வேட்பாளர்களுக்கு நாம் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் நான் புறந்தள்ள முடியாது. அந்த கோரிக்கை வலுவாக எழுந்து வருகிறது. நாம் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் தான் கட்சியையும் வலுப்படுத்த முடியும். அதிகாரத்தை நோக்கி நகர நகர, முன்னணி வேட்பாளர்கள் இடையே போட்டி வலுக்கிறது. 2001 ஆம் ஆண்டில் நான் தேடி தேடி நான் வேட்பாளர்களை போட்டேன்.

2006இல் கூட நம்மிடத்திலே வேட்பாளர்கள் குறைவாக தான் இருந்தார்கள். 2011 மற்றும் 2016 ஆகிய தேர்தல்களில் வேட்பாளர்கள் நம்மிடம் அதிகரித்தனர். 2021 தேர்தலில் ஒரு வேட்பாளர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 10 பேர் இருக்கும் அளவுக்கு போட்டி அதிகரித்தது. புதிய முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாடு உள்ளது. இதனால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க ஒரு கட்டாயம் எனக்கு இருக்கிறது.

இதன் காரணமாகவே ஷா நவாஸ் மற்றும் எஸ் எஸ் பாலாஜிக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க தராமல் போனது. இதனை சமூக வலைத்தளங்களில் திரித்து பலரும் விமர்சனம் செய்தார்கள். ஆனால் அதில் உண்மையில்லை. இந்த தேர்தலில் வெற்றி பெற விஜய்க்கு வாய்ப்பு இல்லை. திமுக, அதிமுக எதிர்ப்பு வாக்குகளை மட்டுமே விஜய் பெருவாரியாக பெறுவார். திமுக மற்றும் அதிமுக எதிர்ப்பு வாக்குகள் என்பது தமிழக அரசியல் களத்தில் எப்போதும் உள்ளன. விஜய் ஆட்சி அமைப்பதற்கும், தனித்த சக்தியாக உருவெடுப்பதற்கும் வாய்ப்பு இல்லை. இவ்வாறு அந்த வீடியோவில் தனது வேதனையை திருமாவளவன் பகிர்ந்துள்ளார். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *