விஜயபாஸ்கரை விடாமல் துரத்தும் அமலாக்கத்துறை: மனைவியும் நேரில் ஆஜராக சம்மன்! | Vijayabaskar Case: ED Summons His Wife for Questioning

Spread the love

இந்நிலையில், தற்போது மீண்டும் இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சி.விஜயபாஸ்கர் வரும் நவம்பர்-6 (வெள்ளிக்கிழமை) அன்றும் மனைவி ரம்யா அடுத்த வாரத்தில் ஏதாவது ஒரு நாளிலும் சென்னை மண்டல அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அதிமுக-வில் எடப்பாடி பழனிசாமி தலைமையுடன் ஏற்பட்ட உள்கட்சிப் பூசல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாக, 2026 ஜூலை 2 அன்று சி.விஜயபாஸ்கர் அதிமுக-வில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு தவெக-வின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் கணக்கா… சட்ட நடவடிக்கையா?

அதிமுக-விலிருந்து விலகி தவெக-வில் இணைந்து விஜயபாஸ்கர் தீவிரமாக ஈடுபட்டு வரும் சூழலில், இந்த சம்மன் விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

“இது வழக்கமான சட்டப்பூர்வமான நடவடிக்கைதான்” என விசாரணை அமைப்புகள் தரப்பில் சொல்லப்பட்டாலும், “தேர்தல் மற்றும் அரசியல் நகர்வுகளை முடக்குவதற்கான நடவடிக்கை” என தவெக ஆதரவாளர்கள் முணுமுணுக்கத் தொடங்கியுள்ளனர்.

விராலிமலை இடைத்தேர்தலில் தவெக சார்பில் சி.விஜயபாஸ்கர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த சம்மன் அழைப்பு அரசியல் வட்டாரத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சி.விஜயபாஸ்கர் ஆஜராவாரா அல்லது கூடுதல் அவகாசம் கேட்பாரா என்பதில்தான் அடுத்த கட்ட அரசியல் திருப்புமுனை அடங்கியிருக்கிறது!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *