சமீபத்தில் அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, “சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தனது வெற்று ஆணைகளை அமெரிக்கர்கள் மீது திணிக்க முட்டாள்தனமாக முயற்சித்தால், ரோமானியப் படைத்தளபதி பாம்பே தன் படைகளுக்கு எதிராக சட்டங்கள் பற்றிப் பேச வந்தவர்களிடம் சொன்ன அதே பதிலைத்தான் நாமும் சொல்ல வேண்டியிருக்கும் – ‘கையில் வாள் வைத்திருப்பவர்களிடம் சட்டங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்காதீர்கள்'” என்று பேசியுள்ளார்.

ஈரான் பதில்
இந்தப் பேச்சுக்குப் பதிலளித்து ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்…
“வாள் ஏந்தியவர்களிடம் சட்டங்களைப் பற்றிப் பேசாதீர்கள்” என்று அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் எச்சரித்துள்ளார்.
இத்தகைய அழிவுகரமான வாதத்தை அலட்சியப்படுத்தியதற்காக மனிதகுலம் ஏற்கெனவே மிகப்பெரிய விலையைக் கொடுத்துள்ளது.
இன்று, ஈரானுக்கு எதிரான போர் ஒழுக்கம் மற்றும் தேசியப் பாதுகாப்பின் பெயரால் நியாயப்படுத்தப்படுகிறது.
அமெரிக்காவிற்கும், ISIS-க்கும்..?
கையில் வாள் வைத்திருப்பதால் தாங்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று அமெரிக்கா நம்பினால், இந்தத் தர்க்கத்திற்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பயன்படுத்தும் தர்க்கத்திற்கும் இடையே என்ன பெரிய வேறுபாடு இருந்துவிடப் போகிறது?
மற்றவர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை வலிமையானவர்கள் தங்களுக்கு மட்டும் சொந்தமாக்கிக் கொள்ளும்போதுதான் சர்வதேச ஒழுங்கு சரியத் தொடங்குகிறது.”

தலை வெட்டப்பட்டு…
மார்கோ ரூபியோவின் பேச்சுக்கு ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி நேற்று (நவம்பர் 16), “வாள் ஏந்தியவர்களிடம் சட்டங்களைப் பற்றிப் பேசாதீர்கள்” என்ற வார்த்தைகளை உதிர்த்த ரோமானியப் படைத்தளபதியின் கடைசிப் போர்,
அவரிடம் பெரும் படைபலம் இருந்தபோதிலும் படுதோல்வியிலேயே முடிந்தது.
போர்க்களத்திலிருந்து தப்பியோடிய அவர், இறுதியில் தலை வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டார்.
இதைவிடச் சிறந்த பொன்மொழி இதுதான்: “கடந்த காலத்தை நினைவில் கொள்ளத் தவறுபவர்கள், அதையே மீண்டும் அனுபவிக்க விதிக்கப்பட்டவர்கள்” என்று பதிவிட்டிருந்தார்.