விஜய்க்கு ஒருபடி மேலே போன சந்திரபாபு நாயுடு! ஆந்திராவில் பெண்களுக்கு இலவச ஏசி பஸ்! அதிரடி அறிவிப்பு | Chandrababu Naidu Goes One Step Ahead of Vijay! Free AC Buses for Women in Andhra Pradesh, Big Announcement

Spread the love

India

oi-Halley Karthik

அமராவதி: மகளிருக்கு இலவச பேருந்து சேவையை தமிழக அரசு நாளை தொடங்கி வைக்கிறது. இந்நிலையில், ஆந்திர அரசு ஒருபடி மேலே போய்.. பெண்களுக்கு இலவச ‘ஏசி’ பஸ் சேவையை தொடங்க இருப்பதாக அறிவித்திருக்கிறது.

ஆந்திர அரசு போக்குவரத்துக் கழகம் இனி வாங்கும் அனைத்து புதிய பேருந்துகளையும் ஏசி வசதியுடன் இருப்பதை உறுதி செய்ய உத்தரவிட்டிருக்கிறது. அதன்படி புதியதாக 550 சிஎன்ஜி ஏசி பேருந்துகளும், 750 புதிய மின்சார ஏசி பேருந்துகளும் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளன.

Chandrababu Naidu

இந்த புதிய மின்சார ஏசி பேருந்துகளுக்காக மாநிலத்தில் உள்ள 12 முக்கிய பேருந்து பணிமனைகளில் சார்ஜிங் உள்கட்டமைப்புகள் தயார் செய்யப்பட்டிருக்கின்றன. தற்போது ஸ்திரீ சக்தி திட்டத்தின் கீழ் பெண்கள், பெண் குழந்தைகள் மற்றும் திருநங்கைகளுக்கு சாதாரண பேருந்துகளாக பல்லேவெலுகு, எக்ஸ்பிரஸ் மற்றும் மெட்ரோ எக்ஸ்பிரஸ் ஆகியவற்றில் ஏற்கெனவே இலவச பயணம் வழங்கப்பட்டு வருகிறது. புதிய ஏசி பேருந்துகள் சேவையில் இணைக்கப்பட்டவுடன், இந்த இலவச பயண சலுகை அந்த ஏசி பேருந்துகளுக்கும் நீட்டிக்கப்படும் என்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியிருக்கிறார்.

இலவச பேருந்து பயண அறிவிப்புகள்

ஏற்கெனவே தமிழ்நாட்டிலும் பெண்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இது நகரங்களில் இயக்கப்படும் வெள்ளை போர்டு பேருந்துகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று இருந்தது. நாளை முதல், வெள்ளை போர்டு மட்டுமல்லாது, LSS, எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் உள்ளிட்ட பேருந்துகளிலும் இலவச பயணத்திற்கு அனுமதி வழங்கப்பட இருக்கிறது.

‘வெற்றிப் பயணத்திட்டம்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த திட்டத்தை முதலமைச்சர் விஜய் நாளை தொடங்கி வைக்க இருக்கிறார். இதன் மூலம் தமிழ்நாட்டிற்குள் இயக்கப்படும் 69% பேருந்துகளில் பெண்கள், சிறுமிகள், மாற்று பாலினத்தவர்கள் இலவசமாக பயணிக்க முடியும். ஆனால், SETC, ஏசி உள்ளிட்ட பேருந்துகளில் பயணம் செய்ய முடியாது.

இப்படி இருக்கையில் விஜய்யை ஓவர்டேக் செய்யும் விதமாக சந்திரபாபு நாயுடு ஏசி பஸ்களிலும் இலவச பயணத்தை அறிவித்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *