பத்தா: “சிறுவன் சாய் பிரிதிவ்ராஜ் தேசிய விருதுக்கு தகுதியானவன்" – இயக்குநர் ஷங்கர் பாராட்டு

Spread the love

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ’சீதக்காதி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி – இயக்குநர் பாலாஜி தரணிதரன் கூட்டணியில் வெளியாகியிருக்கும் மூன்றாவது திரைப்படம் ‘பத்தா’. இயக்குநர் அட்லீ தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். இவர்களைக் கடந்து குழந்தை நட்சத்திரமான சாய் பிருத்விராஜ் நடிப்பும் பெருமளவில் பேசப்படுகிறது. குறிப்பாக பயத்தைக் காட்டுவதாக இருக்கட்டும், தவறைச் செய்துவிட்டு அது சரியாகுமா எனப் பதற்றப்படுவதாக இருக்கட்டும் அழுத்தமான நடிப்பைக் கொடுத்துள்ளார். ஒரு மரத்தடியில் விஜய் சேதுபதியும் அச்சிறுவனும் பேசிக்கொள்ளும் காட்சி கூடுதல் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

சாய் பிரிதிவ்ராஜ்
சாய் பிரிதிவ்ராஜ்

இந்த நிலையில், இயக்குநர் ஷங்கர் பத்தா திரைப்படம் குறித்து தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், “பாத்தா – நல்ல கதை, மனிதநேயம், மிகச்சிறந்த நகைச்சுவை மற்றும் படம் முழுவதும் கைதட்டல்களைப் பெறும் தருணங்கள் நிறைந்த ஓர் அழகான திரைப்படம். மிகவும் சிறப்பான நடிகர்களின் தேர்வு மற்றும் அவர்களின் நடிப்பு. படத்தின் ஒவ்வொரு க்ளோஸ்-அப் காட்சியிலும் அனைவரின் முகபாவனைகளும் மிகவும் அற்புதம். விஜய் சேதுபதியின் ஆத்மார்த்தமான மற்றும் உயர்தரமான நடிப்பு வெளிப்பட்டுள்ளது. சிறுவன் சாய் பிரிதிவ்ராஜ் தேசிய விருது பெற தகுதியானவன்.

லிஜோமோல் ஜோஸ் மிகவும் இயற்கையாகவும் நேர்த்தியாகவும் நடித்துள்ளார். சாய் அபயங்கரின் பின்னணி இசை புத்துணர்ச்சியாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது; அது பல காட்சிகளை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துகிறது. அமைதியும் உணர்ச்சியும் நிறைந்த பல தொட்டுச் செல்லும் தருணங்கள் படத்தில் நிறைந்துள்ளன. இத்தகைய தரமான பிளாக்பாஸ்டர் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் அட்லீ, பிரியா அட்லீ, முராத் கேதானி, அலோக் ஜெயின் மற்றும் அஜித் அந்தாரே ஆகியோருக்கு வாழ்த்துகள். இயக்குநர் பாலாஜி தரணிதரனிடமிருந்து மேலும் ஒரு மறக்க முடியாத திரைப்படம். இது பாலாஜியின் “லைஃப் இஸ் பியூட்டிஃபுல்”.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *