இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ” எங்கள் கட்சிச் செயலாளர் திரு. மு. வீரபாண்டியன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு சட்டமன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான த. இராமச்சந்திரன் ஆகிய நான், எங்கள் கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பாக, தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்காக தமிழக வெற்றி கழகத்திற்கும், அதன் தலைவரும் சட்டமன்ற கட்சித் தலைவருமான திரு. சி. ஜோசப் விஜய் அவர்களுக்கும் எங்களது நிபந்தனையற்ற ஆதரவை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
2026 ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற தமிழ்நாடு பொதுத்தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், தமிழக மக்களுக்கு ஒரு நிலையான, மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக ரீதியிலான ஆட்சியை வழங்கும் நோக்கில் இந்த ஆதரவு வழங்கப்படுகிறது.
எனது இந்த நிபந்தனையற்ற ஆதரவை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் கோப்பில் பதிவு செய்து கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.