குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும், உதயநிதி துணை முதல்வராக்க வேண்டும் என்ற முனைப்புடன் திராவிட கட்சிகள் விஜய்க்கு எதிராக காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திமுக- அதிமுக கூட்டணி இணையுமா? அப்படி இணைந்தால் இரு கட்சிகளுக்கும் பின்விளைவுகளை ஏற்படுத்துமா? என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாமைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அவர், “திமுகவும், அதிமுகவும் இணைவது பின்னடைவைத் தான் ஏற்படுத்தும். ஏன் என்றால் அரசியல் களத்தில் இரண்டு கட்சிக்காரர்களும் நேர் எதிரிகள் பதவிக்காக அனுசரித்துப் போவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.
அதற்கான சாத்தியக் கூறுகளும் இல்லை. 1989 ஜானகி அம்மையாருக்கு சுமார் 96 எம்எல்ஏக்கள் ஆதரவு நம்பிக்கை தீர்மானத்தில் ஆதரவு தருவதாக சொன்ன காங்கிரஸ், கடைசி நேரத்தில் காலை வாரியது. கலைஞர் வீட்டுக்கு ஆர் எம் வீரப்பன் நேரடியாக சென்று திமுக எம்எல்ஏக்கள் ஆதரவை கேட்டார்.
ஜானகி அம்மையார் தொலைபேசி மூலமாக கேட்டார். ஆனால், கலைஞர் மறுத்துவிட்டார். எனவே திமுக அதிமுக இணைந்து ஆட்சி அமைக்காது என்று நான் கருதுகிறேன்” என்று தனது கருத்தைத் தெரிவித்தார்.