“விஜய்யின் ‘குட்டி ஸ்டோரி’கள் பல ஆழமான புரிதலை தந்தன!” – சிபி சத்யராஜ் |”Vijay’s ‘Kutti Stories’ offered many profound insights!” – Sibi Sathyaraj

Spread the love

உங்களுக்குப் போட்டியாக இருக்கும் மற்ற பெரிய நடிகர்களின் ரசிகர்களான எனது நண்பர்களிடம், உங்களுக்காக நான் செய்த ஆரோக்கியமான விவாதங்கள் பல. உங்களின் வெற்றிகளை எனது சொந்த வெற்றியைப் போலவே கொண்டாடி இருக்கிறேன்.

திருமணத்திற்குப் பிறகு உங்கள் வீட்டிற்கு விருந்துக்கு வந்தது, எனது ‘லீ’ படத்தின் தொடக்க விழாவிற்கு நீங்கள் வந்தது, எனது படங்கள் வெற்றி பெற வாழ்த்தி நீங்கள் செய்யும் அழைப்புகள் மற்றும் நான் எப்போது அழைத்தாலும் அல்லது மெசேஜ் செய்தாலும் உடனடியாக நீங்கள் தரும் பதில்கள் என இவை அனைத்தும் என் வாழ்வின் பொக்கிஷமான நினைவுகள்.

நான் ஒரு சினிமா பின்னணியிலிருந்து வந்திருந்தாலும், நான் திரைத்துறைக்குள் நுழைவதற்கு நீங்கள்தான் ஒரு மிகப்பெரிய தூண்டுதலாக இருந்தீர்கள். உங்களின் படங்கள் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்லாமல், உண்மையான காதல், நட்பு மற்றும் கடின உழைப்பின் மதிப்பை எங்களுக்குக் கற்றுக்கொடுத்தன.

உங்களின் ‘குட்டி ஸ்டோரி’கள் வாழ்க்கையைப் பற்றிய ஆழமான புரிதலை எங்களுக்கு அளித்தன. கடந்த 3 தசாப்தங்களாக எங்களை மகிழ்வித்து, ஊக்கப்படுத்தியதற்கு மிக்க நன்றி அண்ணா!

திரையில் நீங்கள் கொடுத்த அந்த அற்புதமான தருணங்களை நாங்கள் எப்போதும் நெஞ்சில் சுமப்போம். வென்று வா தலைவா! நாங்க இருக்கோம்” எனப் பதிவிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *