அடுத்த ஐந்து ஆண்டுகளில் விசிக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு பா.ஜ.க எதிர்ப்பு என்பதில் சமரசமற்ற விசிக, வரும் காலங்களில் விஜய்யுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் இருந்தால் அதை ஆக்கப்பூர்வமாகப் பரிசீலிக்கலாம். இது பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகள் சிதறாமல் இருக்க உதவும். வரும் தேர்தலில் விசிக வெறும் கூட்டணி கட்சியாக இல்லாமல், ஆட்சியில் பங்குபெறும் (அமைச்சர் பதவிகள்) நிலையை அடைய வேண்டும்.

தலித் மக்களின் உண்மையான எம்பவர்மென்ட் (Empowerment) என்பது வெறும் தேர்தல் வெற்றிகளில் மட்டும் இல்லை. அது பொருளாதார வலிமையிலும், அதிகாரப் பகிர்விலும் உள்ளது. திருமாவளவன் போன்ற ஒரு கொள்கை உறுதி கொண்ட தலைவர், நிதி நெருக்கடி மற்றும் கூட்டணி அரசியலின் கட்டாயங்களால் தனது முடிவுகளை மாற்றிக்கொள்ள வேண்டியிருப்பது தமிழ்நாட்டு அரசியலின் ஒரு கசப்பான உண்மை. தி.மு.க-வின் ‘பெருந்தன்மையற்ற’ போக்கு மற்றும் விஜய்யின் எழுச்சி வி.சி.க-விற்கு ஒரு சவாலான காலக்கட்டத்தை உருவாக்கியுள்ளது.” எனத் தெரிவித்திருக்கிறார்.
ஒட்டுமொத்தமாக திருமாவளவனின் தேர்தல் நேர தடுமாற்றம், தொண்டர்களின் சுணக்கம், அதீதிர திராவிட மாடல் ஆதரவு, பொருளாதாரச் சிக்கல், விஜய் எழுச்சி என விசிக-வின் வீழ்ச்சியை இப்படி சுருக்கிவிடலாம்.