தவெக 20 பேர் அமைச்சரவையில் இடம் பெற போவது யார் யார் ? – Kumudam

Spread the love

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ம் தேதி நேற்றைய தினம் எண்ணப்பட்டது. இதில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிபெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. வெற்றி எம்எல்ஏக்களுடன் இன்று காலை பனையூர் தவெக அலுவலகத்தில் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். 

இதன் பின்னர் எம்எல்ஏக்கள் அனைவரும் 3 நாட்கள் சென்னையில் தங்கி இருக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. தவெக எம்எல்ஏக்கள் அனைவரும் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மே 7-ம் தேதி தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 

விஜய் உடன் இணைந்து பதவியேற்க உள்ளார் அமைச்சர் பட்டியலை தயார் செய்யும் பணியில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சென்னை பட்டினபாக்கத்தில் உள்ள இல்லத்தில் மூத்த நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டார். அமைச்சரவையில் ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், அருண் ராஜ், வெங்கட்ராமன், சிடி நிர்மல்குமார், ஜேசிடி பிரபாகர், ராஜ் மோகன், மரியம் வில்சன் ஆகியோர் பதவியேற்க உள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஸ்டாலினை தோற்கடித்த வி.எஸ்.பாபு, சீமானை தேற்கடித்த பிரபு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை தேற்கடித்த விஎம்எஸ் முஸ்தபா, புதுக்கோட்டை பர்வேஸ் உள்ளிட்ட 20 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தெரிகிறது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *