நாகர்கோவிலில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இயக்குநரும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான சௌந்தர்யா ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.
மாற்றுத்திறனாளிகளுக்குச் செயற்கைக் கால்களையும், பெண்களுக்கு வாழ்வாதாரத்திற்கான ஆட்டோக்களையும் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கன்னியாகுமரி பகவதி அம்மன் மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. அந்தப் புனிதமான மண்ணில் இருந்து இந்த நற்பணியைத் தொடங்குவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. “ரவுண்ட் டேபிள்’ அமைப்பின் உதவியோடு, தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, இந்த உதவிகள் நேரடியாக வழங்கப்பட்டுள்ளன.
பயனாளிகளை நேரில் சந்தித்து எனது கைகளாலேயே இந்த உதவிகளை வழங்கியது ஆத்மார்த்தமான திருப்தியைத் தந்துள்ளது. இது ஒரு ஆரம்பம் மட்டுமே. இதேபோல் தமிழகத்தின் அடுத்தடுத்த பகுதிகளிலும் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
ஏற்கெனவே என் குடும்பமும், குறிப்பாக அப்பா நிறைய நல்லவற்றைச் செய்துவருகிறார். இந்த மக்கள் பணி அரசியலாக மாற வாய்ப்பிருக்கிருக்கிறதா என்றால் என்றால்…. இந்த முயற்சி முற்றிலும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் தொடங்கப்பட்டுள்ளது.