மு.மாறன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ப்ரீத்தி அஸ்ராணி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘அப்பா குட்டி’.
நவம்பர் 20ம் தேதி இந்தப் படம் வெளியாகயிருக்கும் நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று (நவ.16) நடைபெற்றது.
இந்த ஈவென்ட்டில் விஜய் ஆண்டனி மனைவி பாத்திமா, அவர் இளைய மகள் லாரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பாத்திமா ஆண்டனி, “மூத்த மகள் மீரா மறைந்த பின் சினிமா விழாவில் கலந்து கொள்ளவில்லை.
5 ஆண்டுகளுக்குபின் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். விஜய் ஆண்டனி செருப்பு அணிவதில்லை. அதற்கு காரணம் இருக்கிறது.
மீராவுக்காக ஏகப்பட்ட செருப்பு, ஷூ வாங்கி வைத்து இருந்தோம். ஒரு அறை முழுக்க அது இருக்கிறது. அதை பார்த்துவிட்டு தான் விஜய் ஆண்டனி இந்த முடிவை எடுத்திருக்கிறார். சில பெரிய ஷோ நடத்தும்போது மட்டும் ஷூ அணிகிறார். அவரிடம் ஏகப்பட்ட விலை உயர்ந்த வாட்ச் இருக்கிறது.

ஆனால் விலைக் குறைந்த வாட்ச் மட்டுமே அணிகிறார். அதுவும் மீரா கடைசியாக கையில் கட்டியிருந்தது. என்னையும், என் தங்கையையும் என் அப்பா 7 வயதில் விட்டு போய்விட்டார். எனக்கு அந்த பாசத்தை கொடுத்தது விஜய் ஆண்டனிதான்” என்று எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb