இந்தியா, ரஷ்யா மீதான வரி: தடை நீக்க 60 நாள் அவகாசம் கேட்கும் அதிபர் ட்ரம்ப்! – காரணம் என்ன?| Tariffs on India and Russia: President Trump seeks a 60-day window before imposing them – what’s the reason?

Spread the love

ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் மீது விதிக்கப்பட உள்ள வரிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்ய அதிபர் ட்ரம்ப் முடிவெடுத்திருக்கிறார்.

உஸ்பெகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கான பயணத்தை தொடங்குவதற்கு முன்பு , அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் மீது விதிக்கப்பட உள்ள வரிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்ய, அதிபர் டொனால்டு ட்ரம்ப் 60 நாட்கள் கால அவகாசம் எடுத்துக்கொள்ள விரும்புகிறார்.

இந்தியா - ரஷ்யா

இந்தியா – ரஷ்யா

உலகப் பொருளாதாரம் மற்றும் அமெரிக்கப் பொருளாதாரத்தில் இத்தகைய முடிவுகள் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கணக்கிடவே இந்த அவகாசம் தேவைப்படுகிறது. இந்தியாவைப் போன்ற முக்கிய நட்பு நாடுகள், ரஷ்ய எரிசக்தி இறக்குமதியை ஒரே நாளில் முழுமையாகக் கைவிடுவது நடைமுறையில் சாத்தியமற்றது என்பதை அமெரிக்கா உணர்ந்துள்ளது. இந்தியா ஏற்கனவே தனது எரிசக்தி தேவைகளைப் பல்வேறு நாடுகளிலிருந்து பெறத் தொடங்கியிருந்தாலும், குறிப்பிடத்தக்க அளவிலான எரிபொருளை ரஷ்யாவிடமிருந்தே தொடர்ந்து பெற்று வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *