”விஜய், உதயநிதியைச் சமாளிக்க டி.டி.வி.தினகரனைச் சேர்க்க வேண்டும்” – அதிமுக நிர்வாகி ஆலோசனை | “TTV Dhinakaran should be brought on board to counter Vijay and Udhayanidhi” – AIADMK functionary’s suggestion.

Spread the love

இதே போல் கும்பகோணம் மாநகரத்தின் பகுதி கழகச் செயலாளர் பத்ம.குமரேசன் கும்பகோணம் மாநகராட்சி கவுன்சிலராகவும் இருக்கிறார். இவர் அதிமுக வலுவடைவதற்கு கட்சியில் டி.டி.வி.தினகரனைச் சேர்க்க வேண்டும் என்றுள்ளார். அப்போது எடப்பாடி பழனிசாமி, தனியாக கட்சி நடத்தி அதன் பொதுச்செயலாளராக இருப்பவரை நாம் சேர்க்க வேண்டும் என இந்த நேரத்தில் பேச வேண்டாம்.

இப்போதைய சூழலுக்கு இது சரி வராது. இந்தச் செய்தி வெளியே போய்விடும் என்று மடைமாற்றியுள்ளார். இது அரசியல் வட்டத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

டி.டி.வி.தினகரன்

டி.டி.வி.தினகரன்

இது குறித்து பத்ம.குமரேசனிடம் பேசினோம், ”கட்சி வளர்ச்சி பெற இளைஞர்களை அதிகளவில் சேர்க்க வேண்டும். இதே போல் டி.டி.வி.தினகரனை கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என்றேன். இதை கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மற்றும் மக்கள் உள்ளிட்ட அனைவரும் விரும்புகின்றனர்.

அதையே நானும் சொல்கிறேன். அதிமுக வலுவடைய வேண்டும் என்றால் தினகரனைச் சேர்க்க வேண்டும் என்று பேசினேன். தற்போதுள்ள சூழலுக்கு அரசியல் ரீதியான நிகழ்வுகளுக்கு உடனுக்குடன் கவுண்டர் கொடுக்க வேண்டும். அதற்கு சரியான நபர் டி.டி.வி.தினகரன். விஜய், உதயநிதி போன்றவர்களைச் சமாளிக்கவும், கட்சி வளர்ச்சி பெற்று பழையபடி வலுவாக மாறவும் தினகரன் அவசியம் வேண்டும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *