கோவை மாநகராட்சி வ.உ.சி. மைதானம் அருகே உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. இதனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சம்பத்குமார், “கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனையில் ரூ.10 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பழைய சேலைகளை கொடுத்துவிட்டு, புதிய சேலைகளை வாங்கிக் கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கோவையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலைகள் சீரமைப்பு பணிகள் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
`விஜய் சேதுபதியின் விமர்சனத்திற்கு பதில் சொல்ல தேவையில்லை; பார்வையாளர்களைக் கவர…’- அமைச்சர் சம்பத்