அதுக்கு நான் வாழ்த்துகள் சொல்லலைனு விமர்சனம் செய்றாங்க. விஜய் மீது எனக்கு பொறாமைனு சொல்றாங்க. நான் அரசியல்ல இல்லை. அதுல நான் இல்லைனு நான் விலகிட்டேன். பிறகு ஏன் எனக்கு பொறாமை வரப் போகிறது.
ஒரு வேளை கமல்ஹாசன் முதல்வர் ஆகியிருந்தால், எனக்கு பொறாமை வந்திருக்குமோ தெரியாது (சிரித்துக் கொண்டே…) எனக்கும் விஜய்க்கும் ஒரு ஜெனரேஷன் இடைவேளை இருக்கு. விஜய்கூட என்னை கம்பேர் பண்ணி பேசினால் எனக்கு நல்லது இல்லை. அதே மாதிரி அவர் கம்பேர் பண்ணினால், அவருக்கும் நல்லது இல்ல. சின்ன வயசுல இருந்து அவரைப் பார்த்துட்டு இருக்கேன்.
அவர் முதலமைச்சர் ஆனதுல எனக்கு என்ன பொறாமை? எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் செய்த சாதனையை விஜய் செய்திருக்கார். இங்க இருக்கிற ரெண்டு பெரிய கட்சிகளை ஜெயிச்சிருக்கார். எனக்கு ஆச்சரியம் கலந்த சந்தோஷம்தான் அதுல.

அவர் மீது எனக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கு. நான் ஏன் அரசியலுக்கு வரலைனு முழுமையாக நான் அறிக்கை விட்டிருக்கேன். என் ரசிகர்களுக்கு அந்த ஆதங்கம் இருக்கதான் செய்யும். அரசியல் என்பது பெரிய பொறுப்பு. அவ்வளவு சுலபமானது கிடையாது அது” என்றவர், “விஜய்யை ரெண்டு வருஷத்துக்கு நம்ம விட்டுவிட வேண்டும். அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கு.
அதே சமயம், அவருடைய ரசிகர்கள், தொண்டர்கள் ஜாக்கிரதையாக இருக்கணும். அவங்க என்ன தப்பு பண்ணினாலும், அது விஜய்யைத்தான் நேரடியாகப் பாதிக்கும்னு நினைக்கணும் அவங்க.
விஜய்க்கு 100 சதவீதம் சினிமா புகழ் உதவியிருக்கு. இளைஞர்கள், பெண்கள், சோசியல் மீடியாவுக்கும் ஒரு காரணம். நான் அரசியலுக்கு வந்திருந்தால் 100 சதவீதம் நான் வெற்றி பெற்றிருப்பேன். அதுல சந்தேகமே இல்ல.” என்றார்.