”விஜய் வாங்கிய வாக்குகள் அனைத்தும் அதிமுக-வின் வாக்குகளே” – முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி | All the votes Vijay received were from AIADMK says ex minister rajenra balaji

Spread the love

விருதுநகரில் அதி.மு.க மேற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது.   

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.டி. ராஜேந்திர பாலாஜி, ”2026-ம் ஆண்டு சட்டமன்றத்  தேர்தல் முடிவுகளை யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த வெற்றி சுனாமி போன்றது. எனவே இது நிலையானதல்ல.

அதிகாரத்தில் இருந்தால்தான் கட்சியை நடத்த வேண்டும் என்ற நிலை ஏற்படும். அந்த நிலை அ.தி.மு.கவிற்கு இல்லை. த.வெ.க தலைவர் விஜய், ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக இல்லாமல் வந்திருக்கிறார்.

ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி

ஒரு நட்சத்திர நடிகரின் மாயையில் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். வேட்பாளர் யார் என்று தெரியாமலேயே வாக்குகள் அவர்களுக்கு விழுந்திருக்கின்றன. த.வெ.க கட்சியில் வெற்றி பெற்றவர்கள் என்ன சாதிக்க முடியும்?

தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெறும், தி.மு.க இரண்டாவது இடத்திற்கு வரும் எனப் பல்வேறு கருத்துக்கணிப்புகள் தெரிவித்த போதிலும், கடைசி நான்கு நாட்களில் ஒரு மாய உலகில் செல்பேசி மூலம் மக்கள் மயங்கிவிட்டார்கள் என்று கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *