Tamilnadu
oi-Rajkumar R
சென்னை: சினிமா கதாநாயகன் போல வசீகர வசனமும், பஞ்ச் டயலாக்கும் பேசுகிறேன் என்று விஜய் வாயை திறந்தாலே கூவம் ஆற்றில வரும் சாக்கடை தான் வெளியே வருகிறது எனவும், அண்ணா தொடங்கிய இயக்கத்தை, எம்ஜிஆர் தொடங்கிய இயக்கத்தை கூட்டு களவாணிகள் என காட்டுக் கூச்சலிட்டுபேசுவது ஜென்சி தலைமுறையை தவறாக வழி நடத்தி வருகிறார் விஜய் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசியுள்ள அவர்,” கரூரில் மக்கள் சந்திப்பில் நிகழ்ச்சியில் விஜய பேசிய பேச்சு ஆணவத்தின் உச்சமாகத்தான் இருக்கிறது. விஜய் இன்னமும் தன்னை ஒரு நடிகராக அடையாளப்படுத்திக் கொள்ளவே விரும்புகிறாரோ என்னவோ?
தமிழ் நாட்டின் கண்ணியமிக்க முதலமைச்சர் பதவிக்கு தன்னை தகுதிப்படுத்திக்கொள்ள அவர் இன்னும் அக்கறை செலுத்தவில்லை. கவனம் செலுத்தவில்லை என்பதுதான் விஜய்யின் ஆணவ பேச்சாக உள்ளது. சினிமா கதாநாயகன் போல வசீகர வசனமும், பஞ்ச் டயலாக்கும் பேசுகிறேன் என்று விஜய் வாயை திறந்தாலே கூவம் ஆற்றில வரும் சாக்கடை தான் வெளியே வருகிறது.

ஆர்பி உதயகுமார்
பேரறிஞர் அண்ணா கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில் தொடங்கிய 75 ஆண்டுகள் பவளவிழா காணும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும், உலகத்திலே ஏழை எளிய சாமானிய மக்களுக்காக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தொடங்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் நாகூசாமல் கோடிக்கணக்கான தொண்டர்களின் மனம் புண்படுகின்ற வகையிலே அதிமுகவும் ,திமுகவும் கூட்டு களவாணிகள் என்று ஒரு களவாணி சொன்னால் எப்படி இந்த நாடு ஏற்றுக்கொள்ளுமா?
விஜய்
இதை சொல்வதற்கு முன்பு முதல்வர் விஜய் நீங்கள் என்ன இந்த நாட்டிற்கு தியாகம் செய்தீர்கள் சமூகநீதிக்காக போராடினீர்களா? பெண் உரிமைக்காக தன்னுடைய இளமை பருவத்தை நீங்கள் தியாகம் செய்தீர்களா? மக்களுடைய கல்வி உரிமைக்காக, ஜீவாதார உரிமைக்காக இளமை பருவத்தை தியாகம் செய்து அர்ப்பணித்து இன்றைக்கு மன வலியோடு ,வேதனையோடு அமர்ந்து உள்ளீர்களா விஜய்? ஒரு இயக்கத்தை நீங்கள் எப்படி கொச்சைப்படுத்தலாம், கேவலப்படுத்தலாம்.
அதிமுக
புரட்சித்தலைவர் உருவாக்கப்பட்ட இந்த இயக்கம் சமூக நீதிக்காக போராடியும், 69 இட ஒதுக்கீடுக்காக போராடிய இயக்கத்தை,0சத்துணவு தந்த இயக்கத்தை கேவலப்படுத்தலாமா? இதுபோன்று பேசுவதற்கு உங்களுக்கு ஒரு நிமிடம் யோசிக்க வேண்டாமா? நாம் கண்ணியமிக்க முதலமைச்சர் வழியில் அமர்ந்திருக்கிறோம், எட்டு கோடி தமிழர்களுக்கும் வழிகாட்டியாக இருக்கும் முதலமைச்சர் அரியணையில் அமர்ந்துள்ளோம் என்று நினைக்க வேண்டும்.
ஜென்ஸி தலைமுறை
அந்த அரியாசனம் அதிர்ஷ்டத்தால் உங்கள் கையில் வந்து விட்டதால், ஜென்ஸி தலைமுறையை உங்களை ஆதரிக்கிறார்கள் என்ற காரணத்தால் அந்த ஜென்ஸி தலைமுறையை தவறாக உணர்ச்சியை தூண்டுவது, தவறாக வழிநடத்தி, வரலாற்றை திரித்து கூறும் வகையில் தவறாக சொல்லலாமா? அண்ணா தொடங்கிய கட்சியையும், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தொடங்கிய கட்சியையும் நீங்கள் கூட்டுக்களவாணி என்று சொல்கிற யோகிதை உங்களுக்கு என்ன உள்ளது
களவாணி
சினிமாவில் நடித்து வருமான வரி செலுத்தாத களவாணி நீங்கள் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். 49 பேர் இறந்தபோது அத்தனை பேரை சவக்காட்டில் விட்டுவிட்டு, கரூரை சுடுகாடாகி விட்டு ஓடி ஒளிந்தவர் விஜய் என அனைவருக்கும் தெரியும். சினிமா வசனத்தில் எதை வேண்டுமானாலும் பேசலாமா காமராஜர், ராஜாஜி, அண்ணா, புரட்சித் தலைவர் ,அம்மா, எடப்பாடியார், ஸ்டாலின் வரை அமர்ந்த கண்ணியமிக்க அந்த முதலமைச்சர் அரியாசனமாகும்.
ஆணவத்தின் உச்சம்
நீங்கள் எல்லாம் முதலமைச்சராக அமர இந்த தகுதியை மக்கள் தந்து இருக்கிறார்கள் 80 ஆண்டு காலம் இந்த தலைவர்கள் எல்லாம் சிந்திய வியர்வை தியாகம் என்பதை மறந்துவிட்டு களவாணி என்று ஒரு களவாணி சொன்னால் அது இந்த நாடு ஏற்றுக்கொள்ளது. வாழ்வை அர்ப்பணித்து இயக்கத்திற்காக, இந்த நாட்டு மக்களுக்காக சேவை செய்தவர்களை கொச்சைப்படுகிற, அவமானப்படுத்துகிற ஆணவத்தின் உச்சத்தை இனியும் பேசுவார் என்றால் பொறுத்துக் கொண்டுதான் போக வேண்டுமா இந்த காட்டுக் கூச்சல் எதற்கு?
கரூர் சம்பவம்
கரூர் சென்று மக்களை காப்பாற்றாமல் சுடுகாட்டில் அவர்களை அனுப்பிவிட்டு ஓடி ஒளிந்த இந்த விஜய் இப்போது மன வலியோடு பேசுகிறேன் என்று கூறுகிறார். உங்களுக்கு என்ன மனவலி என்று விளக்கி சொல்லலாமா நாங்கள் தெரிந்து கொள்கிறோம் அறிந்து கொள்கிறோம். இது போன்ற காட்டுக் கூச்சல் போட்டால் என்ன நடக்கும் என்பது எங்களுக்கு தெரியாது. கரூரில் காட்டுக்கூச்சல் போடுபவர்களுக்கு நாட்டுக்குள் என்ன வேலை?” எனக் கூறியுள்ளார்.

