ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ மற்றும் பலர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் “ஜனநாயகன்”. இப்படம் கடந்த ஜனவரி 9-ம் தேதியே வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, தயாரிப்பு தரப்பு நீதிமன்றத்தை நாடியது. இதனால் படத்தின் வெளியீடு மேலும் தள்ளிப்போனது.
நடிகர் விஜய்யின் கடைசிப் படம் என அறிவிக்கப்பட்ட இப்படம், தேர்தலுக்கு முன்பாகவே சென்சார் சான்றிதழ் பெற்று வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கவில்லை. இதற்கிடையில் தேர்தல் முடிந்து, அதில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகாவது சென்சார் சான்றிதழ் கிடைக்குமா என்று திரையுலகமே எதிர்பார்த்து வந்த நிலையில், ஜூலை 9-ம் தேதி இப்படத்திற்கு “ஏ” (A) சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் போஸ்டரை முதல்வர் விஜய், அவரின் Actorvijay என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த போஸ்டரில் A சான்றிதழ் பெற்றது குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், விரைவில் என்பதும் மாண்புமிகு தமிழ்நாட்டின் முதல்வர் சி.ஜோசப் விஜய் (The Honourable Chief Minister Of Tamilnadu C.Joseph Vijay) என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.