ஆசிரியர்களுக்கும் ஒரு சிறப்பு அங்கீகாரம்!
ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களைத் தேர்வு செய்து ‘Inspirational Guru Awards’ வழங்கப்பட்டன.
பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த சிறந்த கல்வியாளர்கள் இந்த விருதைப் பெற்றனர். மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களின் பங்களிப்பையும் கௌரவிக்கும் விதமாக இந்த விருது நிகழ்வு அமைந்தது.
மாணவர்களே… அடுத்த தலைமுறை தொழில்முனைவோர்கள்!
படிப்போடு தொழில் சிந்தனையையும் வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் ‘Studentpreneur Awards 2026’ போட்டியும் நடைபெற்றது.
இளம் வயதிலேயே தொழில் தொடங்கும் ஆர்வத்தை மாணவர்களிடம் ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மொத்தத்தில், மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தக் கான்க்ளேவ், மாணவர்களுக்கு புத்தகங்களைக் கடந்து வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் ஓர் அனுபவமாக அமைந்தது.
விண்வெளி வீரரின் அனுபவம் முதல் ஒலிம்பிக் சாம்பியனின் வெற்றிப் பயணம் வரை… கிரிக்கெட் மைதானத்தின் பாடம் முதல் களரியின் வலிமை வரை… உடல்நலம் முதல் தொழில்முனைவு வரை…
‘எதிர்காலம் எப்படி மாறினாலும்… அதற்கேற்ப நாமும் மாறத் தயாராக இருக்க வேண்டும்!’ என்ற சிந்தனையை மாணவர்களிடம் விதைத்திருக்கிறது இந்த SSVM Transforming India Conclave 2026.
மேலும் விவரங்களுக்கு, www.ssvmtransformingindia.com இணையதளத்தைப் பார்வையிடவும்.