விபத்து ஏற்படுத்தி 3 உயிர்களை காவு வாங்கிய சுஹைல் | சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டதால் சர்ச்சை! | Suhail caused accident claiming 3 lives, sparks controversy after being sent to a juvenile reform home.

Spread the love

கேரள மாநிலம் ​கொச்சி நெடும்பாசேரி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த ‘மினி கூப்பர்’ சொகுசு கார் மோதியதில் வயநாடு கல்பற்றாவைச் சேர்ந்த தேவிகா (21), பாலக்காடு மன்னார்க்காட்டைச் சேர்ந்த கோபிகா (22) மற்றும் கர்நாடகாவின் கூர்க் பகுதியைச் சேர்ந்த இய்யாஸ் (21) ஆகிய மூன்று கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

விபத்தை ஏற்படுத்திய தொழிலதிபரின் மகன் சுஹைல் சஜீவை(19) பொதுமக்கள் மடக்கிப் பிடித்தபோது, “எல்லாவற்றையும் என் அப்பா பார்த்துக்கொள்வார்” என்று அவர் அதிகாரத் தோரணையில் திமிராகப் பேசியது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கைதான சுஹைல் சஜீவ் கோர்ட்டில் ஆஜர்படுத்தி இளம் குற்றவாளிகளுக்கான சீர்திருத்தப் பள்ளிக்கு (போர்ஸ்டல் பள்ளிக்கு) அனுப்பப்பட்டார். அவர் மதுபோதையில் வாகனம் ஓட்டியது குறித்து முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்படாததும் பெரும் சர்ச்சையையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

அவரைச் சாதாரண சிறையில் அடைக்காமல் போர்ஸ்டல் பள்ளிக்கு அனுப்பியதும், எஃப்.ஐ.ஆரில் மதுபோதை தொடர்பான பிரிவுகள் உடனடியாகச் சேர்க்கப்படாததும் வழக்கை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சி என உயிரிழந்த மாணவர்களின் உறவினர்களும் பொதுமக்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.

செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அரசுத் தரப்பிலும் காவல்துறையிலும் தலையீடுகள் உள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ​இச்சம்பவம் குறித்து எழுந்த அனைத்து சந்தேகங்கள் குறித்தும் கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்து ரமேஷ் சென்னிதலா கூறுகையில், ​”நெடும்பாசேரியில் நடந்தது மிகவும் வேதனையான சம்பவம்; ஒட்டுமொத்த கேரளாவையும் உலுக்கிய ஒரு நிகழ்வு. எந்தத் தவறும் அறியாமல் சாலையில் சென்றுகொண்டிருந்த மூன்று பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர். அந்தக் குடும்பங்களின் வேதனையை நாம் அனைவராலும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

மரணமடைந்த மாணவிகள் மற்றும் மற்றும் மானாவர்

மரணமடைந்த மாணவிகள் மற்றும் மற்றும் மானாவர்

அந்தக் குற்றவாளியை யாராவது காப்பாற்ற முயன்றால் அது ஒருபோதும் நடக்காது. சட்டத்தின் கீழ் என்னென்ன தண்டனைகள் கொடுக்க முடியுமோ, அவை அத்தனையையும் கண்டிப்பாகப் பெற்றுத் தருவோம். ​அவரை ஏன் போர்ஸ்டல் பள்ளிக்கு அனுப்பினார்கள் என்ற குழப்பமும் சந்தேகமும் பலருக்கு ஏற்பட்டுள்ளது.

அவரை அங்கு அனுப்பியது காவல்துறை அல்ல, நீதிமன்றம்தான் அவரை அங்கு அனுப்பியது. 21 வயதுக்குட்பட்டவர்கள் குற்றவாளிகளாக வரும்போது, அவர்களை எங்கு அனுப்ப வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது நீதிமன்றம்தான். காவல்துறை அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதும் நீதிமன்றம் ரிமாண்ட் செய்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *