`விமானங்களின் எரிபொருள் மீதான VAT வரி குறைப்பு’ – அமைச்சர் கீர்த்தனா சொல்லும் விளக்கம்!| ‘Reduction of VAT on aviation fuel’ – Minister Keerthana provides an explanation!

Spread the love

தமிழ்நாட்டில் விமான எரிபொருள் மீதான வாட் வரி 29 சதவிகிதமாக இருந்தது. இதைக் குறைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு விமான நிறுவனங்கள் கோரிக்கை வைத்து வந்தன. இந்த நிலையில், 29 சதவிகிதமாக இருந்த மதிப்புக் கூட்டு வரியை 16 சதவிகிதமாக குறைத்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. இது குறித்து விளக்கமளிக்கும் வகையில், தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா தன் எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டின் வான்வழிப் போக்குவரத்துத் துறைக்கு இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்! சென்னைப் விமான நிலையத்தில் உள்நாட்டு விமானங்களுக்கான விமான எரிபொருள் மீதான மதிப்புக் கூட்டு வரியை (VAT) 29 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாகக் குறைக்கிறோம்.

அதேபோல், தமிழ்நாட்டின் பிற விமான நிலையங்களில் இந்த வரியை வெறும் 1 சதவீதமாகக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த வரிக்குறைப்பின் மூலம் விமானப் பயணத்தை சாமானியர்களுக்கும் எளியதாக மாற்றுவதோடு, நமது மண்டல விமான நிலையங்களின் போட்டியிடும் திறனையும் அதிகரிக்கும் தீர்க்கமான அடியை எடுத்து வைத்துள்ளோம். குறைந்த இயக்கச் செலவு காரணமாக, விமான நிறுவனங்கள் புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்தவும், விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், சென்னைக்கு அப்பால் உள்ள நகரங்களுக்கும் தங்களது சேவைகளை விரிவாக்கவும் முன்வரும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *