Suicide-prevention ceiling fans installed in student hostels: A new initiative at a Surat university.-தற்கொலையை தடுக்க மாணவர் விடுதியில் தற்கொலை தடுப்பு மின்விசிறிகள்:சூரத் பல்கலைக்கழகத்தில் புதுஏற்பாடு

Spread the love

இந்த முடிவு குறித்து பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் கிஷோர்சிங் சாவ்தா கூறுகையில்,”‘பல்கலைக்கழக வளாகத்தில் இதுவரை இத்தகைய சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்தச் சிறப்பு மின்விசிறிகளைப் பொருத்தியுள்ளோம். வீர் நர்மத் தெற்கு குஜராத் பல்கலைக்கழகம் முழுவதும் சுமார் 388 ‘தற்கொலை தடுப்பு’ மின்விசிறிகளைப் பொருத்தி வருகிறோம். இவற்றின் முக்கிய அம்சம் என்னவென்றால், மின்விசிறியில் ஏதேனும் எடை கொடுக்கப்பட்டால், அதன் ஸ்பிரிங் அமைப்பு செயல்பட்டு, மின்விசிறி கீழ்நோக்கி இறங்கிவிடும்.

அதே நேரத்தில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுவிடும். இது ஒரு விலைமதிப்பற்ற உயிரைக் காப்பாற்ற உதவும். பிற பல்கலைக்கழகங்களில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்ததைக் கருத்தில் கொண்டு, எங்கள் பல்கலைக்கழக வளாகத்தில் இத்தகைய நிகழ்வுகளைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆறு முறை அல்லது 12 முறைக்கு மேல், எங்கள் பல்கலைக்கழகம் தேர்வுகளை நடத்த தயாராக இருக்கிறது. ஆனால் மாணவர்கள் தேர்வு தொடர்பான மன அழுத்தத்தால் இதுபோன்ற நடவடிக்கையை எடுக்கக்கூடாது. தற்கொலை எண்ணங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.அவர் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *