விழுப்புரம்: செஞ்சி சிறுமி மாயமான விவகாரம்; மீண்டும் ஆரம்பித்த இடத்திலேயே நிற்கும் காவல்துறை!

Spread the love

அதற்கு மறுநாளே சி.பி.சி.ஐ.டி எஸ்.பி.ஜவஹர், டி.எஸ்.பி கீதா, இன்ஸ்பெக்டர் ரேவதி உள்ளிட்டவர்கள் ஆலம்பூண்டி கிராமத்தில் ஆஜரானார்கள். சிறுமியின் பெற்றோர் உட்பட காவல்துறை விசாரணை செய்த அனைவரிடமும் மீண்டும் விசாரணையை மேற்கொண்டனர் சி.பி.சி.ஐ.டி போலீஸார்.

அதையடுத்து காவல்துறையால் ஏற்கெனவே விசாரிக்கப்பட்ட சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளி ராஜதுரை என்பவரை தூக்கிய போலீஸார், அவரை சிறுமி படித்த பள்ளி மற்றும் சுடுகாட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.

ஆனால் அதிலும் எந்தத் தகவலும் கிடைக்காததால் அவர் திருப்பி அனுப்பப்பட்டார். இதற்கிடையில் தி.மு.க.வும், அ.தி.மு.க-வும் காவல்துறையை மற்றும் த.வெ.க அரசைக் கண்டித்து தனித்தனியாகப் போராட்டங்களை நடத்தின. அதேபோல முன்னாள் முதல்வர்கள் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறுமி விவகாரத்தைக் கையிலெடுக்க, தமிழக அளவில் முக்கியத்துவம் பெற்றது இந்த வழக்கு.

காவல்துறை மற்றும் சி.பி.சி.ஐ.டி தனித்தனியே வெளியிட்ட `காணவில்லை’ போஸ்டர்கள்

காவல்துறை மற்றும் சி.பி.சி.ஐ.டி தனித்தனியே வெளியிட்ட `காணவில்லை’ போஸ்டர்கள்

அதனால் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக, காவல்துறையால் விசாரிக்கப்பட்டவர்களை மீண்டும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர் சி.பி.சி.ஐ.டி போலீஸார். இதற்கிடையில் காஞ்சிபுரம் டி.எஸ்.பி வேல்முருகன் உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் நேற்று முதல் கூடுதலாகக் களமிறக்கப்பட்டிருக்கின்றனர்.

மேலும் சிறுமியின் புகைப்படம் கேரளம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதிலும் தற்போது வரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

அதையடுத்து வழக்கை ஏற்கெனவே விசாரித்து வந்த காவல்துறை வெளியிட்டதைப் போல, சிறுமி குறித்த தகவலைக் கேட்டு செல்போன் எண்களை வெளியிட்டிருக்கின்றனர் சி.பி.சி.ஐ.டி போலீஸார்.

அதனால் ஆரம்பித்த இடத்திலேயே மீண்டும் வந்து நின்றிருக்கிறது சிறுமியைத் தேடும் படலம்.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *