இந்நிலையில், அரைக்கப்பட்ட சுமார் 89 லட்சம் டன் கரும்பில், சுமார் 10.20 லட்சம் டன் கரும்பு, பதிவு செய்யாத விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டு அரைக்கப்பட்டுள்ளது. இதில் பாரபட்சம் காட்டாமல் அனைவருக்கும் வழங்க வேண்டும்.
இந்தத் தொகையை தீபாவளிக்கு முன்பு வழங்க வேண்டும். இதே போல் தவெக தேர்தல் வாக்குறுதியில் கரும்புக்கு டன்னுக்கு ரூ.4,500 தருவதாக அறிவித்தார்கள். ஆனால் தற்போது 4,000 மட்டும் தருகின்றனர். தேர்தல் சமயத்தில் சொன்னபடி பாராபட்சம் காட்டாமல் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

இடைத்தரகர்கள், விவசாய சங்கங்களின் தலையீடுகள் இல்லாமல், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் கரும்புக்கான ஊக்கத்தொகையை நேரடியாக வரவு வைக்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்டம் 125 நாளாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் 80 நாட்களாக வேலை செய்ததற்கான சம்பளம் வழங்கப்படவில்லை. தாமதிக்காமல் அந்தச் சம்பளத்தையும் வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேசியக்கொடி, விவசாய கருவிகள் மற்றும் கரும்பு ஆகியவற்றுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்” என்றார்.