அப்போது மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து யாரிடமாவது பணம் கடன் வாங்குவதற்காகச் சென்ற தேவி, திரும்பி வந்து காலை உணவுக்காக மகன் சஞ்சயைத் தேடியிருக்கிறார். சஞ்சய் வீட்டில் இல்லாததைக் கண்ட அவர், அக்கம்பக்கத்தில் தேடியிருக்கிறார். எங்கும் சஞ்சய் இல்லாததால் கணவரிடம் கேட்டிருக்கிறார். அப்போது, `அவனை அந்தக் கெனத்துல தூக்கிப் போட்டுட்டேன்’ என்று கூலாகக் கூறிவிட்டு, மதுபோதையில் படுத்திருக்கிறார். பதறிப்போன தேவி, அழுதுகொண்டே கிணற்றை நோக்கி ஓடியிருக்கிறார்.
விழுப்புரம்: மது போதையில் மனைவியுடன் தகராறு! – ஆறு வயது மகனை கிணற்றில் வீசி கொலை செய்த தந்தை கைது