விழுப்புரம்: மாயமான செஞ்சி சிறுமியைத் தேடும் 100 போலீஸார்! – கதறும் பெற்றோர்; திணறும் காவல்துறை

Spread the love

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஆலம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த 11-ம் தேதி தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். அதன்பிறகு இரவு தன்னுடைய பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த அவர், மறுநாள் 12-ம் தேதி அதிகாலையில் மாயமானார்.

பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் முதல் நாள் மகிழ்ச்சியாக பிறந்தநாளைக் கொண்டாடிய சிறுமி மறுநாளே காணாமல் போனதால், அதிர்ச்சியில் உறைந்தது கிராமம். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த சத்தியமங்கலம் போலீஸார், சிறுமியைத் தேட ஆரம்பித்தனர்.

ஆனால் முதல் நாள், இரண்டாவது நாள் என அடுத்தடுத்த நாட்களிலும் சிறுமி மாயமான விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், அலெர்ட் ஆனார் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி மதிவாணன்.

செஞ்சி சிறுமி

செஞ்சி சிறுமி

அதையடுத்து நான்கு டி.எஸ்.பிக்கள் தலைமையில் 100 போலீஸார்கள் கொண்ட 8 தனிப்படைகளை அமைத்த அவர், சிறுமியைத் தேடும் பணியை தீவிரப்படுத்தினார். கடந்த 11-ம் தேதி இரவு 11 மணி முதல் 12-ம் தேதி அதிகாலை 3 மணி வரை அந்தப் பகுதியில் இருக்கும் செல்போன் டவர்களில் பதிவான சுமார் 500-க்கும் மேற்பட்ட அழைப்புகள் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.

அதேபோல கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் உதவியுடன், அந்த கிராமங்களைச் சுற்றியிருக்கும் கிணறு உள்ளிட்ட நீர் நிலைகளில் சிறுமி சிக்கியிருக்கிறாரா என்று ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் இன்றுடன் 5 நாட்கள் ஆன நிலையில் சிறுமி குறித்த எந்தத் தகவலும் கிடைக்காமல் திணறி வருகிறது காவல்துறை. இதுகுறித்து எஸ்.பி மதிவாணனிடம் கேட்டபோது, “சிறுமியின் வீடு மிகவும் சிறியது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *