இந்த ஆலயத்தில்தான் நவகிரக குருவான பிரகஸ்பதியின் சாபம் தீர்ந்தது.
முன்னூற்று மங்கலம் என்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட தலத்தில், அம்பிகையுடன் நடனம்புரிந்து ஆனந்த மயமாகத் திகழும் ஐயன் ஆடவல்லீஸ்வரரை தரிசித்து வழிபட்டு பிரகஸ்பதி இழந்த தன் தேஜஸை மீட்டெடுத்தார் என்கிறது தலபுராணம்.
இப்படி வெற்றியும் ஞானமும் செலவமும் அருளும் திருத்தலத்தில் சக்தி விகடனும் ஆடவல்லீஸ்வரர் திருக்கோயில் நிர்வாகமும் இணைந்து வரும் ஆகஸ்ட் 28 வெள்ளிக்கிழமை நாளில் விளக்குபூஜை நடத்த இருக்கிறார்கள். ஆவணி வெள்ளிக்கிழமைகள் அம்பாளை வழிபட மிகவும் உகந்த தினங்கள். அதிலும் விளக்கு வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. கேட்கும் வரம் தருவது.
காரணம், நூற்றுக்கணக்கானவர்கள் ஓரிடத்தில் திரண்டு விளக்கேற்றி அம்பிகையை வழிபடும்போது ஒவ்வொரு தீபத்திலும் அன்னை ஆவாஹனம் ஆவாள். அப்போது அம்பிகையின் நூற்றுக்கணக்கான தரிசனம் காண்பவர்க்கும் பூஜை செய்பவர்க்கும் கிடைக்கும். அப்படி ஒரே இடத்தில் நிகழும் சர்வ சக்தி சங்கமத்தில் நாம் வைக்கும் வேண்டுதல்கள் எல்லாம் பலிக்கும். காரிய ஸித்தி உண்டாகும். எனவே சக்தி விகடன் வாசகியர் திரளாய் வந்திருந்து முன்னூர் விளக்கு பூஜையில் கலந்துகொண்டு பயன்பெற அழைக்கிறோம்.

கலந்துகொள்ளும் வாசகியர் கவனத்துக்கு:
விளக்குப் பூஜையில் கலந்துகொள்ளும் வாசகியர், விளக்கு, விளக்கை வைப்பதற்கான தட்டு, மணி, பஞ்சபாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தித் தட்டு ஆகியவற்றை எடுத்து வந்தால் போதுமானது. மற்றபடி பூஜைக்குத் தேவையான திரி, எண்ணெய், தாம்பூலப் பொருள்கள், நைவேத்தியம் முதலானவற்றை நாங்களே வழங்குகிறோம்.
அற்புதமான இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் வாசகியர் இங்கு தரப்பட்டுள்ள link-ஐ பயன்படுத்தி உரிய விவரங்களைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்யலாம் அல்லது கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது.
முன்பதிவுக்கு: 044-66802980/07