வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
பிறந்தநாள் வாழ்த்து செய்தி:
*இயற்கையாக என் உடன்பிறவா விட்டாலும், நான் என்றுமே என் அண்ணாவாக நினைக்கும் என்னோட விஜய் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…
*அனைத்திலும் வெற்றி பெற்ற நீங்கள் உங்கள் வாழ்க்கையிலும் வெற்றி பெற வேண்டுமென்பதே ஒரு தங்கையாக என் ஆசை…
*உங்களை அவதூறு பேசிய வாய்கள் அடங்கும் நாளுக்காக காத்திருக்கிறேன் அண்ணா..
*இதற்கெல்லாம் நல்ல ஒரு ஆரம்ப புள்ளியாக உங்கள் பிறந்தநாள் அமையட்டும் அண்ணா
*நீங்கள் என்றென்றும் சந்தோஷமாகவும், உடல் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டுமென கடவுளை வேண்டுகிறேன்
*என் ஆயுளையும் உங்களுக்கே அர்ப்பணிக்க ஆசைப்படுகிறேன்
* என்னோட அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லும் அளவிற்கு வயதில்லை.. அதனால் வணங்குகிறேன்..
* வாழ்க வளமுடன் அண்ணா
2. என்னைக் கவர்ந்த படம்: விஷ்ணு
எனக்கு அப்போது 6 வயது இருக்கும்.டிவியில் விஷ்ணு என்ற ஒரு திரைப்படம் பார்த்தேன்..அந்த படத்தில் இருந்து தான் நான் விஜய் அண்ணாவுக்கு ரசிகையானேன்..அதில் சங்கவி மேடம் தாவணியில் விஜய் அண்ணா மீன் பிடிக்கும் காட்சி மற்றும் விஜய் அண்ணாவின் குறும்புத்தனங்கள் தான் என்னை அவருக்கு ரசிகையாக மாற்றியது..அதில் இடம்பெறும் சிங்காரக் கண்ணுக்கு மை கொண்டு வா பாடலுக்கு நான் அடிமை என்றே சொல்லலாம்… அந்த அறியாத வயதில் கூட விஜய் அண்ணாவின் நடனம் என்னை மிகவும் கவர்ந்தது… காலப்போக்கில் அவர் என் ரோல் மாடலாக மாறினார்.. படத்தையும் தாண்டிய உறவு என்றால் அது எனக்கும் என் விஜய் அண்ணாவுக்குமுள்ள ஒரு நல்ல அண்ணன் தங்கை உறவு தான்..அவர் என் கூட மட்டும் தான் பிறக்கவில்லை… மற்றப்படி அவருக்கு வலிச்சா அவரை விட எனக்கு வலிக்கும் அளவிற்கு அவர் என் இரத்தத்தில் கலந்து விட்டார்..
இதற்கெல்லாம் ஆரம்பப் புள்ளி விஷ்ணு படம்… அதனால் எப்போதும் முதல் வரிசையில் விஷ்ணு படம் இருக்கும்
3. தியேட்டர் அனுபவம்: போக்கிரி படம்
போக்கிரி படம் தான் முதல் முறையாக நான் தியேட்டரில் பார்த்த ஞாபகம்.. midnight ஷோ அப்பாவுடன் பைக்ல நானும் என் அக்காவும் சென்றோம்..படம் ஆரம்பிக்க நேரம் இருந்ததால் நான் வெளியே போக்கிரி போஸ்டர் ஒட்டியிருந்ததே பார்த்து கொண்டிருந்தேன்..அதன் அருகே ஆழ்வார் பட போஸ்டரும் ஒட்டியிருந்தது..அப்போது ஆழ்வார் போஸ்டருக்கிட்ட போய் இப்ப விஜய் அண்ணா படம் பாக்குறேன்..அப்பறமா வந்து உன் படம் பாக்குறேனு நான் அஜித் முகத்தில் கை வைத்து பேசியது மறக்க முடியாத சிரிப்பான் அனுபவம்..
பிறகு , என் அப்பா படம் பார்க்கல..பைக் வாட்டர் சர்விஸ் பண்றேன்..நீங்க ரெண்டு பேரும் போய் படம் பாருங்கனு டிக்கெட் எடுத்து கொடுத்து உள்ளே அனுப்பி வைத்தார்..போக்கிரி படம் ஆரம்பித்ததுமே நான் சீட்ல உட்காரல..ஒரே சவுண்டு, ஆர்ப்பரிப்பு, அளவில்லா சந்தோஷம்… விஜய் அண்ணா என்ட்ரி அப்போ நான் சந்தோஷத்தில் குதிக்கிறேனு தெரியாம கால் தவறி முன்னாடி சீட்ல இருந்த ஒரு அண்ணா மேல போய் கைவச்சிட்டேன்…உடனே அவர் திரும்பி பார்க்கவும் சாரி அண்ணா என்று சொல்லிவிட்டு நான் மீண்டும் விஜய் அண்ணாவ ரசிக்க ஆரம்பித்ததெல்லாம் என் வாழ்நாளில் மறக்கவே முடியாத அனுபவங்கள்…
படம் முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பும்போது நேரம் அதிகாலை 4.30 மணி இருக்கும்.. நான் தூங்கவே இல்லை…ஏனா அன்றைக்கு காலையில் நான் கம்ப்யூட்டர் பிராக்டிகல் நோட் சப்மிட் பண்ணணும்… அதனால் தூங்காம உட்கார்ந்து எழுதிவிட்டு, அப்படியே கெளம்பி பள்ளிக்கூடத்திற்கு போனேன்.. பள்ளிக்கூடத்தில் என் நண்பர்களிடம் போக்கிரி படத்தின் கதையை அவர்கள் காது வலிக்க சொல்லியதெல்லாம் இன்றும் மறக்கவே முடியாத அழகான நினைவுகள்
இப்படிக்கு
பெயர்: விசாலி
இடம்: சென்னை (பள்ளிக்கரணை)