பட்டயக் கணக்காளரின் கேஸ் ஸ்டடியை எடுத்துக்கொண்டால்…
அவர் முதலில் கூறிய, அவருடைய மனைவியின் 55.8 கிராம் தங்கம்.
வருமான வரித் துறையினரின் கணக்கின் படி, பட்டயக் கணக்காளரின் வீட்டில் இருந்து மொத்தமாகத்தான் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
வீடு என்றால், அங்கே பட்டயக் கணக்காளர் மட்டும் இருக்கமாட்டார். அங்கேதான் அவரின் மனைவியும் இருப்பார்.
நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் விதிமுறையின் படி, அவரின் மனைவிக்கு 500 கிராம் தங்கம் வரை வைத்திருக்கலாம்.
இதனால், 55.8 கிராம் தங்கம் 500 கிராம் தங்கத்திற்குள்ளேயே அடங்கிவிடும்.
இரண்டாவது, அவர் வாங்கிய 72.6 கிராம் தங்கத்திற்குப் பக்கா கணக்கு உள்ளது. இதனால், எந்தப் பிரச்னையும் இல்லை.
மூன்றாவதாக, பரிசு என்று அவர் கூறுவதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலே குறிப்பிட்டுள்ள பட்டயக் கணக்காளர் நடுத்தர வயது உள்ளவர். அவருக்குத் திருமணமும் ஆகிவிட்டது.
இதனால், இந்தியாவின் கலாசாரப்படி, தங்கத்தைப் பரிசாக வழங்குவது இயல்பு. அவருடைய வயதைக் கணக்கில் கொள்ளும்போது, அவர் தங்கத்தைப் பரிசாக அதிகம் பெற்றிருக்கலாம்.
அடுத்ததாக, திருமணத்தின்போது, தங்கம் பரிசாக வழங்கப்படுவதும் இயல்புதான்.
இவற்றை கணக்கில் கொண்டுதான், பட்டயக் கணக்காளரை எந்தவொரு புகாருமின்றி இந்த வழக்கில் இருந்து விடுவித்திருக்கிறது தீர்ப்பாயம்.