வீட்டு பணிப்பெண் மகனோடு சிறைபிடிப்பு ? நடிகர் ரவி மோகன் போலீஸ் விசாரணை – Kumudam

Spread the love

திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்துக் கொண்டிருப்பவர் தான் ஜெயம் ரவி மோகன்.சமீப காலமாகவே இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து வந்துக் கொண்டிருக்கின்றார்.திருமண வாழ்க்கையிலிருந்து பிரிந்து போவதாக கூறி அவருடைய மனைவி விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடினார்.

இது சமூக வலைதளங்களில் எல்லாம் மிக பரப்பாக போய்க் கொண்டிருந்தது.இதில் மிகவும் பாதிக்கப்பட்டு தன் மகனை பார்க்க கூட அனுமதி கொடுக்கவில்லை என்று கண்ணீர் மல்க இவர் அளித்த பேட்டி அனைவரும் மத்தியில் அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில் தான் ரவி மோகன் வீட்டில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.சென்னை நீலாங்கரை பகுதியில் வசிக்கும் மோகன் வீட்டில் பணிபுரிகின்ற இரு பெண்களை அவர் வீட்டிலேயே கட்டி வைத்து மிரட்டியதாக ஒரு அதிர்ச்சியான தகவல் பரவி வருகின்றது.

நேற்று ரவி மோகன் வீட்டிற்கு சென்று இரு பணிப்பெண்கள் வீடு திரும்பவில்லை என்று பெண்களின் வீட்டில் உள்ள உறவினர்கள் காவல் துறையிடம் பணிக்கு சென்ற பெண்களை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்துள்ளனர்.  நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது 2 பணிப்பெண் மற்றும் அவரது மகன் வீட்டிற்குள் சிறைபிடிக்கப்பட்டு வைத்ததாக கூறப்படுகிறது. விசாரித்த போது இவர்கள் திருடி விட்டதாக நடிகர் ரவி மோகன் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.

போலீசார் நீங்கள் இது போல விசாரிக்க கூடாது புகார் அளியுங்கள் விசாரிக்கிறோம் என்று அவர்களை அனுப்பி வைத்தனர். காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளிக்கும்படி நடிகர் ரவி மோகனை போலீசார் அறிவுறுத்தி சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *