பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாரபட்சமின்றி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு, தண்டனை பெற்றுத் தரப்பட்டது. இவை அனைத்தும் பொதுவெளியில் இருக்கும், மறுக்க முடியாத உண்மைகள் ஆகும். எவரையும் காப்பாற்ற வேண்டிய தேவை கழக ஆட்சிக்கு இல்லை. தற்போதைய த.வெ.க. ஆட்சியில் நடப்பதுபோல, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீது அனைத்துப் பத்திரிகைகளின் முன்பும் பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பின்னரும், நடவடிக்கை எடுக்காமல், சமரசம் பேசி வழக்கை முடித்து வைக்கும் இழிசெயல்கள் கழக ஆட்சியில் நடைபெறவில்லை.
எனவே, சிறுமிகளுக்கு ஏற்பட்ட துயரத்தை இடைத்தேர்தலுக்கான கருவியாகப் பயன்படுத்தும் இழிவான செயலையும், முற்றிலும் பொய்யான அவதூறுகளை ஊடகங்கள் மூலமாக பரப்புவதையும் ஆளும்கட்சியினர் நிறுத்திக் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி பெற்றுத் தருவது மட்டுமே நம் அனைவரின் நோக்கமாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”