“வெற்றிகரமாக மருத்துவ சிகிச்சை முடித்துள்ளார் பவன் கல்யாண்!” – சிரஞ்சீவி |”Pawan Kalyan has successfully completed his medical treatment!” — Chiranjeevi

Spread the love

ஆந்திராவின் துணை முதலமைச்சரும் நடிகருமான பவன் கல்யாண் உடல் நலக்குறைவால் கடந்த வெள்ளிக்கிழமை (17.04.2026) அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த சனிக்கிழமை (18.04.2026) அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அவருடைய உடல்நிலை பற்றி நடிகரும், பவன் கல்யாணின் சகோதரருமான சிரஞ்சீவி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

பவன் கல்யாண்

பவன் கல்யாண்

அந்தப் பதிவில் அவர், “வெற்றிகரமாக மருத்துவ சிகிச்சை முடித்துள்ள கல்யாண் பாபு (பவன் கல்யாண்) தற்போது நல்லபடியாக மீண்டு வருகிறார்.

மருத்துவர்களின் தகவலின்படி, அவர் மீண்டும் வழக்கமான செயல்களுக்குத் திரும்ப சுமார் ஒரு வாரம் ஆகலாம். ஆனால், கவலைப்பட வேண்டியதில்லை. உங்களின் அன்பிற்கும், அக்கறைக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி.

அவரைத் தொடர்ந்து நமது நினைவுகளில் வைத்து அவருக்கு வலிமை, ஆறுதல் மற்றும் விரைவான குணமடைதலை வேண்டுவோம்.” எனப் பதிவிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *