வெற்றி சான்றிதழ் கொண்டு வர மறந்த அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாக பதவியேற்கவில்லை – Kumudam

Spread the love

17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தொடங்கியது. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியது. புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார் தற்காலிக சபாநாயகர் கருப்பையா. எம்எல்ஏவாக விஜய், எதிர்கட்சி தலைவர் உதயநிதி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதவியேற்று கொண்டனர். 

ஆனால்  தவெக அரசின் அமைச்சர் கீர்த்தனா, எம்.எல்.ஏ. ஆக தேர்வான சான்றிதழை எடுத்து வராததால் சட்டப் பேரவையில் உறுப்பினராக பதவியேற்க முடியவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், பிற அமைச்சர்களுடன் அவர் உறுப்பினராக பதவியேற்க முடியாமல் போனது. சான்றிதழை கொடுத்த பிறகு பதவியேற்றுக் கொள்வார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

அவரை தவிர்த்து மற்ற எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவி பிரமாணம் செய்து வைத்து வருகிறார். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *