“வெளிநாட்டுப் படிப்பில் மாணவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்!” – அரசிடம் பா.ரஞ்சித் கோரிக்கை | The overseas higher education scholarship scheme must achieve a comprehensive solution – Pa. Ranjith

Spread the love

பாபாசாகேப் அம்பேத்கர் பெயரில் நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இத்திட்டம், உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல், பணிகளைச் சரியான காலத்திற்குள் முடிக்காமல் செயல்படுத்தப்படும்போது, அதன் நோக்கம் சிதைந்து, பெயரளவிலான திட்டமாக மாறும் அபாயம் உள்ளது. ஆகையால், தமிழக வெற்றிக் கழக அரசு கீழ்கண்ட பரிந்துரைகளை ஏற்று, இப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வை ஏற்படுத்த வேண்டும்.

1. விண்ணப்ப நடைமுறையானது ஜனவரி மாதத்தில் தொடங்கி, பிப்ரவரி மாதத்திற்குள் முழுமையாக முடிக்கப்பட்டிருக்க வேண்டும். நடப்பாண்டில் இப்பணி தாமதமாகத் தொடங்கி, ஜூலை இறுதியில்தான் முடிவடைந்துள்ளது. எதிர்வரும் ஆண்டு முதல் இந்தத் தாமதம் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

2. தமிழக அரசின் நிதியுதவி சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற வேண்டும். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் தமிழக அரசின் நிதியுதவியை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் வகையில், தேவையான ஒப்பந்தம் அல்லது தெளிவான அங்கீகாரம் பெற வேண்டும்.

3. மாணவர்கள் விசா, பல்கலைக்கழகங்களுக்கு செலுத்த வேண்டிய வைப்புத்தொகை, தங்குமிடம், பயணச் செலவு போன்றவற்றுக்கு தங்களது சொந்தப் பணத்தை முன்கூட்டியே செலவழிக்க வேண்டிய நிலை தவிர்க்கப்பட வேண்டும். Scholarship sanction மற்றும் payment schedule ஆகியவை முன்கூட்டியே தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *