வெள்ளை உடும்பு, 16 மலைப்பாம்பு; பாங்காக் டு திருச்சி; ஏர்போர்ட்டில் சிக்கிய 45 அறிய வகை உயிரினங்கள்!

Spread the love

வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையம் வழியாக சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு அரிய வகை வனவிலங்குகள் மற்றும் ஊர்வன உயிரினங்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சிக்கிய உயிரினங்கள்

அதன்பேரில், தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு வழியாக திருச்சி வந்திறங்கிய விமானத்தில் பயணித்த பயணிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த இரண்டு இந்தியப் பயணிகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, அவர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டனர். அவர்களுடைய உடைமைகளை தீவிரமாக சோதனை செய்தபோது அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அவர்கள் கொண்டு வந்த பைகளில் இருந்த 27 உணவு பொட்டலங்களுக்குள் அரிய வகை வனவிலங்குகளை உயிருடன் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அவற்றிலிருந்து 23 பாம்புகள், 16 மலைப்பாம்புகள், 5 தேகு, மற்றும் ஒரு வெள்ளை உடும்பு உட்பட மொத்தம் 45 ஊர்வன உயிரினங்கள் உயிருடன் மீட்கப்பட்டன. இதையடுத்து, சட்டவிரோதமாக வனவிலங்குகளைக் கடத்தி வந்த குற்றத்திற்காக 1962-ம் ஆண்டு சுங்கச் சட்ட விதிகளின்படி அந்த இரண்டு இந்திய பயணிகளையும் அதிகாரிகள் கைதுசெய்தனர்.

அதோடு, அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அரிய வகை ஊர்வன உயிரினங்கள் அனைத்தும் மேல் விசாரணைக்காக திருச்சி விமான புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *