இப்போது ஒரு பெண் பின்னால் சுற்றும் கதையை தம்பி செய்தால் சரியாக இருக்காது’ எனக் கூறிவிட்டார். பிறகு, ‘சண்டக்கோழி’ படமும் விஜய் சாரை வைத்துதான் நான் செய்யத் திட்டமிட்டிருந்தேன்.
ஆனால், அது மிஸ் ஆகிவிட்டது. பிறகு, ‘வேட்டை’ படத்தையும் அவரை வைத்துச் செய்வதற்குத்தான் நான் திட்டமிட்டிருந்தேன். ஆனால், அதுவும் மிஸ் ஆனது.
என்னுடைய படத்தை விரும்பிப் பார்ப்பவர்களும், விஜய் சாரின் ரசிகர்களும் என்னிடம் வந்து ‘நீங்கள் விஜய் சாருக்கு ஏன் படம் பண்ணவில்லை? நீங்கள் இருவரும் இணைந்தால் நன்றாக இருக்கும்’ எனச் சொல்வார்கள்.

ஒரு முறை ‘லியோ’ ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரைச் சந்தித்தபோது, ‘படம்தான் செய்ய முடியவில்லை. ஒரு வார்டு கவுன்சிலராவது’ எனச் சொன்னேன் (சிரித்துக்கொண்டே). அதற்கு அவர் அப்போது ‘அண்ணா, சும்மா இருங்கண்கணா’ என்றார்” எனப் பகிர்ந்துகொண்டார்.