இதன் அடிப்படையில் வீட்டிலுள்ள மற்ற ஹவுஸ்மெட்ஸ் அவர்களில் யார் வெளியேற வேண்டும் எனத் தனித்தனியாக வாக்களிப்பார்கள். அதன் மூலம் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறுவார். கடந்த வாரம் ஓர் ஓட்டில் ஜாவீத் வெளியேறினார்.
இந்த வாரம் லட்சுமி பிரியா வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ̀Un Fair Eviction’ என அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளப் பக்கங்களில் இது குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் லட்சுமி பிரியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”சில விஷயங்கள் unfair-ஆ போச்சு. லீடர் எக்சிட் போர்டுல என்னை போட்டாங்க. ஒருவேளை அவங்க யாரையாச்சும் காப்பாத்த அப்படிப் பண்ணியிருக்கலாம். ஆனா, எனக்குத் தெரியும் நாங்க எங்க பெஸ்டைத்தான் கொடுத்தோம்.
பார்க்கிற உங்களுக்கும் தெரியும் யாருடைய பர்ஃபார்மன்ஸ் நல்லா இல்லைன்னு” என்கிற கேப்ஷனுடன் ஸ்டோரி பகிரப்பட்டிருக்கிறது.
அதில் அவருடைய ரசிகர்கள் பலரும், ”வீட்டிலிருந்து நீங்கள் வெளியேற்றப்பட்டிருக்கலாம்… ஆனா, இது unfairனு எங்களுக்குத் தெரியும்” எனத் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
இன்றைக்கு அவர் வீட்டிலிருந்து வெளியேறும் ப்ரொமோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.