ஷேக் சையத் ரோடில் காரை ஓட்டும்போது அல்லது மரீனா ஏரியாவில் காபி குடிக்கும்போது ஒவ்வொரு வளைகுடா (Gulf) வாழ் தமிழர்களும் தனக்குள்ளே சொல்லிக்கொள்ளும் மந்திரச் சொல் இது.
கைநிறைய சம்பளம், டாக்ஸ்-ஃப்ரீ வருமானம், வருடாந்திர லீவில் ஊருக்குப் போகும் கெத்து என வாழ்க்கை சொகுசாகத்தான் நகர்கிறது. ஆனால், அந்த “ரெண்டு வருஷம்’ என்பது 15 வருடங்களாக நீண்டு கொண்டே போகும். அதுதான் வளைகுடா வாழ்க்கையின் மிகப்பெரிய சிக்கலே!
நிஜமான வலி: நடுத்தர வர்க்கக் கனவுகளும், உள்ளூர் பயமும்
நிதி ரீதியாக நீங்கள் நல்ல நிலையில் இருக்கலாம். ஆனால், உள்ளுக்குள் ஒரு பயம் எப்போதும் அரித்துக்கொண்டே இருக்கும்:
“நாளைக்கே நிறுவனத்தில் லே-ஆஃப் நடந்தால் என் நிலைமை என்ன?”
“இந்தியாவில் இதே சம்பளத்தில் எனக்கு வேலை கிடைக்குமா?”
“என் பிள்ளைகளின் ஸ்கூல் ஃபீஸை ஊருக்குப் போன பின் எப்படி கட்டுவேன்?”
இந்த பயத்தை மறைக்க, வளைகுடா அதிகாரிகள் செய்யும் தப்பு: ஊரில் சொகுசு பங்களா கட்டுவது அல்லது கமர்ஷியல் லேண்ட் வாங்கிப் போடுவது. சொந்தக்காரர்களிடம் பந்தாவாக காட்டிக்கொள்ள இது உதவும். ஆனால், இந்த டெட்-அசெட்டுகள் (Dead Assets) உங்களுக்கு அவசரத்திற்கு ‘கேஷ் ஃபுளோ’ (Cash Flow) தராது. செங்கல் உங்களைக் காப்பாற்றாது; உங்களுக்குத் தேவை மாதாந்திர கரன்சி.
தீர்வு: வேலை செய்யும்போதே 2-வது சம்பளம்!
நீங்கள் வளைகுடாவில் ஏசியில் அமர்ந்து வேலை செய்துகொண்டிருக்கும்போதே, இந்தியாவில் உங்களுக்காக ஒரு இரண்டாவது வருமானம் (Second Income) தயாராக வேண்டும். இதற்காக நீங்கள் ரிட்டையர் ஆகும் வரை காத்திருக்கத் தேவையில்லை.
இதோ உங்களுக்கான ‘பணச் சுதந்திர’ ஃபார்முலா:
1. லைஃப்ஸ்டைல் ட்ராப் (Lifestyle Trap): சம்பளம் ஏற ஏற, செலவுகளையும் ஏற்றாதீர்கள். ஆடம்பர கார்களும், பிராண்டட் வாட்ச்களும் உங்களை அங்கே நிரந்தர கார்ப்பரேட் அடிமையாக்கும்.
2. பணத்தை வேலைக்கு வைப்பது: உங்களின் மாதாந்திர உபரிப் பணத்தை (Surplus Cash), இந்தியப் பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் SIP (Systematic Investment Plan) முறையில் முதலீடு செய்யுங்கள்.
3. 6-7% வட்டி தரும் வங்கி FD-க்கான மாற்று: 20% மட்டும் வங்கி FD-களில் வைத்துக்கொண்டு மீதிப்பணத்தை Lumpsum-ஆக டைவர்ஸிஃபைடு மியூச்சுவல் ஃபண்டுகளில் போடுங்கள்.
நீங்கள் மாதம் ₹50,000 சேமித்து ஒரு டைவர்ஸிஃபைடு மியூச்சுவல் ஃபண்டில் SIP செய்கிறீர்கள். இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் மியூச்சுவல் ஃபண்டுகள் சராசரியாக 12% கூட்டு வட்டி (Compounding) தருகிறது என வைத்துக் கொள்வோம்.
10 வருடங்களில்: நீங்கள் சேர்த்த மொத்தத் தொகை தோராயமாக ₹1.15 கோடி
12 வருடங்களில்: அந்தத் தொகை ₹1.60 கோடியாக மாறும்.
இப்போது, உங்களது வளைகுடா உழைப்புக்குப் பின், இந்த ₹1.60 கோடியை SWP (Systematic Withdrawal Plan) முறைக்கு மாற்றுகிறீர்கள். (10% கூட்டு வளர்ச்சி | 4% Yearly Withdrawal).
இதன் மூலம், நீங்கள் இன்னும் அங்கே வேலை செய்துகொண்டிருக்கும் போதே, மாதந்தோறும் ₹50,000 உங்களது இந்திய வங்கிக் கணக்கிற்குச் சம்பளம் போல வரத் தொடங்கும். 20 ஆண்டுகள் கழித்து ₹ 2.3 கோடி எடுத்த பின்னரும் உங்கள் கையில் ₹4.5 கோடி இருக்கும்.

இறுதி முடிவு: துபாய் ஏர்போர்ட்டில் நிம்மதியான சிரிப்பு
இந்த இரண்டாவது வருமானம் கைக்கு வரத் தொடங்கும்போது, உங்களது மன உளைச்சல் மொத்தமாக காணாமல் போகும்.
* கம்பெனியில் மறு சீரமைப்பு (Restructuring) நடந்தால் நெஞ்சு பதறாது.
* உங்கள் மேனேஜர் பிரஷர் கொடுத்தால் பயப்படத் தேவையில்லை.
* உங்கள் குடும்பத்தின் இஎம்ஐ (EMI), குழந்தைகளின் கல்விச் செலவு எல்லாவற்றையும் இந்த ₹50,000 பார்த்துக்கொள்ளும்.
துபாய் ஏர்போர்ட்டில் இருந்து நீங்கள் எப்போது இந்தியாவுக்கு ஃபிளைட் ஏறினாலும், அது ‘வேலை போய்விட்டதே என்ற பதற்றமாக’ இருக்காது; ‘வாழ்க்கையை வென்றுவிட்ட நிம்மதியாக’ இருக்கும். வளைகுடாவில் நீங்கள் வாங்குவது சம்பளம் அல்ல; உங்களின் சுதந்திரத்தை வாங்குவதற்கான மூலதனம். அதனை நீங்கள் சரியாக நிர்வகிக்கிறீர்களா?
SIP & SWP மூலம் இரண்டாவது வருமானம் பெறுவது எப்படி?
அரபு அமீரகம், சவுதி, குவைத் போன்ற வளைகுடா நாடுகளில் வசிக்கிறீர்களா? வரும் சனி (ஜூலை 11), 12: 30 மணிக்கு நீங்கள் ஃப்ரீயா? வெறும் 2 மணி நேரத்தில் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் SIP & SWP மூலம் 2-வது வருமானம் பெறுவது எப்படி? என்பதை அறிந்துகொள்ள, NRI ஆன்லைன் சிறப்பு வழிகாட்டலில் கலந்துகொள்ளுங்கள். முன்பதிவு செய்ய: https://labham.money/events/webinar-jul11-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_jul11_2026
லாபம் நிபுணரிடம் பேச: https://labham.money/tamil/nri
பொறுப்புத் துறப்பு: மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்ட ஆவணங்களை சரியாகப் படித்துப் பார்க்கவும்.