ஷாக் கொடுக்கும் தவெக: முதல் ஒருமணி நேரத்தில் தலைகீழாக மாறும் களம்! – என்ன சொல்கிறது? | As the vote counting for the Tamil Nadu Assembly elections continues, TVK maintains a steady lead.

Spread the love

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு பரபரப்பான மே 4-ம் காலை இது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணிநேரங்களிலேயே, தமிழ்நாட்டின் அரசியல் களம் ஒரு மிகப்பெரிய அதிர்வலையைச் சந்தித்துள்ளது.

குறிப்பாக, “கோட்டை’ என்று கருதப்பட்ட பல தொகுதிகளில் ஆளுங்கட்சியான தி.மு.க-வைப் பின்னுக்குத் தள்ளி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதற்சுற்று முடிவுகளில் முன்னிலை பெற்று வருவது அரசியல் நோக்கர்களை மலைக்க வைத்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையங்களிலிருந்து வரும் முதற்கட்டத் தகவல்கள் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு திராவிடக் கட்சிகளுக்குமே கடும் அதிர்ச்சியை அளித்துள்ளன.

குறிப்பாக, நகர்ப்புறத் தொகுதிகளில் த.வெ.க-வின் கை ஓங்கியிருக்கிறது. குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொகுதியான சேப்பாக்கம் – திருவல்லிகேணி, தி.நகர், அண்ணா நகர், தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் எனத் தொடர்ந்து தவெக முன்னிலை வகித்து வந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *