இந்த நிகழ்வில் பேசிய நஸ்ரியா, “சென்னைக்கு வருவதற்கு எனக்கு எப்போதும் பிடிக்கும். நான் தமிழ் படங்கள் செய்யாத நாட்களிலும், தமிழ் மக்கள் எனக்குக் கொடுத்த அந்த அன்பும், காதலும், ஆதரவும் எப்போதும் குறைந்ததே இல்லை.
‘சீன்’ திரைப்படத்தைத் தங்களின் முதல் தயாரிப்பாகத் தேர்ந்தெடுத்த ‘ழகரம்’ நிறுவனத்திற்கு மிகப்பெரிய நன்றிகள்.
இனி இங்கிருந்து உங்களின் பயணம் மிகச் சிறப்பாக அமையும். இயக்குநர் ஜித்து மாதவன், எனக்கு ‘மாயா’ என்ற கதாபாத்திரத்தைக் கொடுத்ததற்கு மிகப்பெரிய நன்றி.

அந்த மாயா கேரக்டர் ஒரு ‘ஒன் பீஸ்’ கதாபாத்திரத்தைப் போன்றது. ஜித்து மாதவனின் முதல் ஹீரோயின் நான்தான் என்று பெருமையாகச் சொல்வேன்.
12 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு மீண்டும் வரக் காரணம், முதலாவது சூர்யா சார்தான். உண்மையிலேயே இது எனக்குக் கனவு நனவான தருணம். இதற்கு முன்பு ஒன்று இரண்டு முறை வாய்ப்புகள் தவறினாலும், இறுதியாக நாங்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் முதன்முறையாக நடிக்கிறோம் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
12 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்குத் திரும்பி வந்து, என்னுடைய சொந்த ஊரைச் சேர்ந்த மனிதர்களோடு ஒரே ஃபிளைட்டில் வந்து ஷூட்டிங் செய்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.” எனப் பகிர்ந்திருக்கிறார்.